நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நன்கு விளையாடும் இளம் வீரர் ஒருவருக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என தினேஷ்கார்த்திக் வலியிறுத்தியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0071

அமீரகம்:  இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூரில் முதல் டி20 போட்டியில் விளையாடி  5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இன்னும் 2 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்  இரண்டு அணிகளும் விளையாடவுள்ளன.

கடந்த முதல் டி20 போட்டியில் பேட்டிங் என்னதான் சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு தனி கவனம் பெற்றது.தலா 2 விக்கெட்களை  விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் கைப்பற்றினர். மேலும் இளம் வீரரான முகமது சிராஜும் ஒரு விக்கெட் எடுத்தார். அவர் 4 ஓவர்களில் 39 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

சிராஜுக்கு நேற்றைய போட்டியில்  கடைசி ஓவரை வீசும் போது காயம் ஏற்பட்டு கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்கியது. காயம் அதிகமாகி அவசர அவசரமாக  மைதானத்திலேயே தையல் போடும் நிலை ஏற்பட்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும் “கிரிக்பஸ்” இணையதளத்துக்கு பேசியுள்ள அவர், “சிராஜ், ஹர்ஷல் ஆகிய இருவருமே சிறப்பாகவே பந்துவீசி வருகின்றனர். முகமது சிராஜ் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.

அதே சமயம் ஹர்ஷல் படேல் ஸ்லோ பால்களை லாவகமா வீசும் திறமை வாய்ந்தவர். மேலும் மிகச்சரியான நேரத்தில் சரியான ஸ்லோ பால்களை வீசும் திறமை கொண்டவர். டி20 போட்டிகளுக்கு இதுபோன்ற பந்துவீச்சு மிகவும் அவசியம். ஆவேஷ் கானும் ஹர்ஷல் பட்டேலை போல சிறந்த பவுலர் தான். பேட்டர்கள் அதிரடி காட்டி விளையாடும் போது சிராஜை அழைத்தால் நிச்சயம் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைபற்றுவார்.

ஆனால் முதலாவது போட்டியில் சிராஜுக்கு சரியான நேரத்தில் ஓவர்கள் வழங்கப்படவில்லை எப்போது பேட்டர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அப்போதுதான் சிராஜை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் .இந்திய அணியில் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமென்றாலும் அணியில் சேர்க்கலாம். தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை ஹர்ஷல் படேல்  டி20 போட்டிகளில் சிறந்தவர் என்று தோன்றுகிறது”. என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நன்கு விளையாடும் இளம் வீரர் ஒருவருக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என தினேஷ்கார்த்திக் வலியிறுத்தியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.