நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம், இறுதிப்போட்டி நடக்காதது வருத்தமலிக்கிறது – Virat Kohli…

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடந்திருந்தால் மிகவும்  சிறப்பாக இருந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் இடையிடையே மழைக்காரணமாக சிலசமயம் போட்டி சற்று தாமதமாகவே துவங்கியது.

இருப்பினும் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்து பெய்த  மழையால் வேறு வழியின்றி ஐசிசி ரத்து செய்துவிடலாம் என அறிவித்தது. இதனால் போட்டி டிரா எனக் கூறி முடிக்கப்பட்டது.

எப்படியாவது வென்றுவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த இந்திய அணிக்கு இது மாபெரும் ஏமாற்றமாக இருந்தது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாகவே அனைவரும் நினைக்கிறார்கள்.

இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன்கள் மட்டுமே  தேவை என்ற நிலையில், கைவசம் 9 விக்கெட்கள் என்ற இருந்தது. இந்த சாதகமான நிலையில்தான் கடைசி நாள் ஆட்டம் டிரா என முடிக்கப்பட்டது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட காரணத்தால், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கினார்கள்.

இரு அணியின் புள்ளிகளும் சமமாக இருந்ததால் போட்டி டிரா ஆனது.கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கடைசி நாளில் போட்டி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், நடக்காமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது.

இந்த டெஸ்டில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்ததை நாங்கள் அறிவோம், நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது” என்றார் இந்திய அணியின் கேப்டன். நிச்சயம் இது இரசிகர்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இது மிகவும் வருத்தமாகவே  இருப்பினும் போட்டி முடிந்த கையோடு கேப்டன் ஒலிம்பிக்கை மறக்கவில்லை.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளை கேப்டன் விராட் கோலி பாராட்டினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும், பங்கேற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி, ஆனால் நீங்கள் நாட்டுக்காக உங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் உங்களால் நாடு பெருமையடைகிறது, இனி வரும் காலங்களில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர்களுக்கு உற்ச்சாகமளித்துள்ளார்.

இதேபோல சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வினும் ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment on "நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம், இறுதிப்போட்டி நடக்காதது வருத்தமலிக்கிறது – Virat Kohli…"

Leave a comment

Your email address will not be published.


*