‘நிச்சயம் சிறந்த கேப்டனாக திகழ்வார்’: இந்திய இளம் வீரரை புகழும் கவாஸ்கர்!

இந்திய இளம் வீரர் ஒருவர் வருங்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின்போது இளம் வீரர் ஸ்ரேயஷ் ஐயருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், போட்டியிலிருந்து உடனே விலகிய அவர் எச்ஞிய போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயத்தின் தன்மை அபாயகரமானதாக இருந்ததால், ஸ்ரேயஷுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனால், ஐபிஎல் 14ஆவது சீசனில் இவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

ஸ்ரேயஷ் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். இதனால் புதுக் கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீவன் ஸ்மித், அஜிங்கிய ரஹானே பொன்ற கேப்டன்ஸியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால், இவர்களில் ஒருவர்தான் அணித் தலைவராக இருப்பார் என கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ரிஷப் பந்தை கேப்டனாக நியமித்தது அணி நிர்வாகம்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி 8 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடிக்கிறது. இவரின் கேப்டன்ஸி குறித்து தற்போது பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பந்த் இனி வரும் போட்டிகளின் மூலம் தனது சிறுசிறு தவறுகளைத் திருத்திக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக வருவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

“ரிஷப் பந்த் கேப்டன்ஸி சிறப்பானதாக இருந்தது. இதனால்தான் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் நீடிக்கிறது. டெல்லி அணி பங்கேற்ற போட்டிகள் முடிந்தப் பிறகு பேசும் கிரிக்கெட் விமர்சகர்கள், ரிஷப் பந்த் கேப்டன்ஸியை குறை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அனுபவம் வாய்ந்த கேப்டன்களே பல நேரங்களில் தவறு செய்கிறார்கள். ரிஷப் பந்த் புதிது, அவர் ஏன் தவறு செய்யக் கூடாது. தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால்தான் விமர்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“ரிஷப் பந்த் அனுபவங்களைப் பெற ஐபிஎல் தொடரே போதுமானது. அவரால் விரைந்து தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். வருங்காலத்தில் இவர் சிறந்த கேப்டனாக திகழ்வார்” எனக் கூறினார்.

ஐபிஎல் 14ஆவது சீசனில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள ரிஷப் பந்த் 35.50 சராசரியுடன் 213 ரன்கள் குவித்து தனது டெல்லி அணியை முதல் இடத்திற்கு இட்டுச் சென்றார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "‘நிச்சயம் சிறந்த கேப்டனாக திகழ்வார்’: இந்திய இளம் வீரரை புகழும் கவாஸ்கர்!"

Leave a comment

Your email address will not be published.


*