நடராஜனை உடனே நீக்குங்க: பிசிசிஐயின் கோரிக்கை எதுக்கு, யாருக்குனு தெரியுமா?

TNCA release natarajan
TNCA release natarajan

விஜய் ஹசாரே கோப்பை தொடரிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தூருக்குப் புறப்படும் 20 பேர் கொண்ட அணியில் நடராஜன் இடம் ஆர்.எஸ்.ஜகநாத் சீனிவாஸ் பெறுவார்.

இந்தியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், பிசிசிஐயின் கோரிக்கை அடிப்படையில் விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்கும் தமிழ்நாடு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், மார்ச் 12ஆம் தேதி துவங்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒருநாள், டி20 தொடர்களில் நடராஜன் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் ஹசாரே டிராபியில் நடராஜன் பங்கேற்கும் பட்சத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

அந்த நேரத்தில் இங்கிலாந்து எதிரான ஒருநாள், டி20 தொடரில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்கு திரும்பி மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இரண்டு தனிமைப்படுத்துதல்களைத் தவிர்க்கவே அவர் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடராஜன் நீக்கம் குறித்துப் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், “நடராஜனை நீக்கச் சொல்லி பிசிசிஐயிலிருந்து எங்களுக்குக் கடிதம் வரவில்லை. வாய்மொழி உத்தரவு வந்ததாகத் தான் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு அவர் தேவை என்பதால் நாங்கள் விடுவித்துள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ராமசாமி பேசியபோது, “பிசிசிஐயிடம் இருந்து எங்களுக்குக் கோரிக்கை வந்தது. இந்திய அணிக்காக விளையாடச் செல்பவரைத் தடுக்க விரும்பவில்லை. நடராஜனுக்கு மாற்றாக புதிய வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அவரை விடுவித்துள்ளது உண்மைதான்” என்றார். முன்னதாக பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கும் போட்டிகளுக்கான 20 பேர் கொண்ட தமிழக அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.தமிழகத் தேர்வாளர்கள் தலைவர் எஸ்.வாசுதேவனும் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியதோடு, விஜய் ஹசாரே டிராபி அணியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார் என்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மூன்று வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றார். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணிக்கு அறிமுகமான நடராஜன், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான முறையில் பந்துவீசினார். குறிப்பாக டி20 தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி, அடுத்து விஜய் ஹசாரே டிராபியையும் தட்டித்தூக்க தயாராகி வருகிறது. முன்னதாக சுற்றுப்பயணத்தில் தனது முதல் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் அவர் தொடர்-வென்ற பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடினார்.

Be the first to comment on "நடராஜனை உடனே நீக்குங்க: பிசிசிஐயின் கோரிக்கை எதுக்கு, யாருக்குனு தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.