தோனி சாதனையை ரிஷப் முறியடிப்பார்: இந்திய முன்னாள் வீரர் உறுதி!

Rishabh Pant will break MS Dhoni’s records: Kiran More
Rishabh Pant will break MS Dhoni’s records: Kiran More

மகேந்திரசிங் தோனியின் சாதனையை முறியடிக்க ரிஷப் பந்திடம் போதுமான ஆற்றல் உள்ளது என இந்திய முன்னாள் வீரர் கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜுன் 18-22 வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்து அணி ஏற்கனவே தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்துத் திணறியபோது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் கடந்து போட்டியை இந்திய அணி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இவர் இப்போட்டியில் மட்டுமல்ல சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரைக் கைப்பற்ற காரணமாக இருந்தார். இவர் குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிரன் மோர், மகேந்திரசிங் தோனியின் சாதனையை இவரால் முறியடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். “தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு வகையான மண் தன்மை கொண்ட மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளத் தொடர்ந்து கற்க வேண்டும். இதையெல்லாம் ரிஷப் பந்த் தொடர்ந்து செய்தால் நிச்சயம் மகேந்திரசிங் தோனியின் சாதனையை முறியடிக்க முடியும்.

கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமே” எனத் தெரிவித்தார். முன்னதாக பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த சில மாதங்களாக மற்ற வீரர்களைவிட ரிஷப் பந்த் அதிகமாக உழைத்தார். அவருடைய உழைப்பு, தேக ஆற்றல் இரண்டும் அவரின் வளர்ச்சிக்கு காரணம். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், உலக அளவில் தவிர்க்க முடியாத வீரராக வளம் வருவார்” என்றார். அவர் இந்திய திருப்புமுனைகளில் விளையாடும் வரை, அவர் கற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த நேரத்தில், அவர் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் திருப்பு தடங்களில் விளையாடியவுடன், அப்போதுதான் அவர் கற்றுக்கொள்வார். அவருக்கு 23 வயது மட்டுமே. இந்தியாவில் விக்கெட்டுகளை வைத்திருக்கவும், அவரை வெளிநாட்டில் மட்டுமே விளையாடவும் நீங்கள் அனுமதிக்காவிட்டால், அவரது வளர்ச்சி வீழ்ச்சியடையும்,

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.

Be the first to comment on "தோனி சாதனையை ரிஷப் முறியடிப்பார்: இந்திய முன்னாள் வீரர் உறுதி!"

Leave a comment