தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தியது.

www.indcricketnews.com-indian-cricket-news-100203192
Karn Sharma of Royal Challengers Bengaluru celebrates the wicket of Nitish Kumar Reddy of Sunrisers Hyderabad during match 41 of the Indian Premier League season 17 (IPL 2024) between Sunrisers Hyderabad and Royal Challengers Bangalore held at the Rajiv Gandhi International Stadium, Hyderabad on the 25th April 2024. Photo by Faheem Hussain/ Sportzpics for IPL

ஹைதராபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடித்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்ற  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூபிளெசிஸ்-விராட் கோலி ஜோடியில்  டூப்ளெசிஸ் 3 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 25(12) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த வில் ஜேக்ஸ் 6(9) ரன்கள் மட்டுமே எடுத்து மயாங் மார்க்கண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.

ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி நிலைத்து நின்று விளையாட, அவருக்கு உறுதுணையாக ரஜத் பட்டிதரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இந்நிலையில் ரஜத் பட்டிதர் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 50(20) ரன்கள் எடுத்திருந்தபோது உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் தனது 94ஆவது அரைசதம் கடந்த கோஹ்லி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 51(43) ரன்களுடன் உனத்கட் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் மஹிபால் லோம்ரார் 7(4) ரன்னுடன் உனத்கட் பந்துவீச்சிலும், தினேஷ் கார்த்திக் 11(6) ரன்களில் பேட் கம்மின்ஸ பந்துவீச்சிலும்,  இறுதியில் ஸ்வப்னில் சிங் 12(6) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆனால் மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் 5 பவுண்டரி உட்பட 37(20) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனால் ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடியில் ஹெட் 1(3) ரன்னுடன் வில் ஜேக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 31(13) ரன்களுடன் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் தலா 7 ரன்னுடன் ஸ்வப்னில் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 13(13) மற்றும் அப்துல் சமாத் 10(6) ஆகியோர் சொற்ப ரன்களுடன் கரண் சர்மா பந்துவச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் மறுபுறம் ஷாபாஸ் அகமது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு உறுதுணையாக களமிறங்கிய கேப்டன் பேட் கம்மின்ஸும் அதிரடியில்  மிரட்டினார். இருப்பினும் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 31(15) ரன்கள் எடுத்திருந்த கம்மின்ஸ் கேமரூன் க்ரீன் பந்துவச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த புவனேஷ்வர் குமாரும் 13(13) ரன்களுடன் கேம்ரூன் க்ரீன் பந்துவீச்சிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் மறுமுனையில் 40(37) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஷாபாஸ் அகமது வெற்றிக்காக இறுதிவரை போராடிய போதும், ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த போதும், புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலும், இப்போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தியது."

Leave a comment

Your email address will not be published.


*