தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய வீரர்களின் மிகப்பெரிய அச்சுறுத்தலை வாசிம் ஜாஃபர் தேர்ந்தெடுத்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-060

நியூ டெல்லி: டிசம்பர் 26 முதல் தொடங்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவைத் தேர்ந்தெடுத்து, அவரைப்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், “தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான தொடரை பொறுத்தவரை பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிக் நோர்ட்ஜே காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், வேகப்பந்துவீச்சாளர்களில் சிறந்தவரான ரபாடா அணியில் உள்ளார். இந்திய பேட்டர்களுக்கு சவால் விடும் அளவுக்கு போதுமான தரம் அவரிடம் உள்ளது.

ரபாடா ,இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.16 சராசரியில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில், 15 விக்கெட்டுகளை மட்டும் 2018 தொடரில் இந்தியாவுக்கு எதிராக  மூன்று டெஸ்டுகளின் போது வெறும் 20.26 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 41.17 இல் ரபாடாவால் எடுக்கப்பட்டது. இதில், குறுகிய காலத்திலேயே விராட் கோலி 7 முறை அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

கோலியை போலவே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான  கே.எல்.ராகுல் 32 ரன்கள் மட்டுமே அடித்து 2 முறை அவுட்டாகியுள்ளார். அதேபோல, மயங்க் அகர்வால் 109 ரன்கள் அடித்து 3 முறை விக்கெட்டைகளையும்,புஜாரா 75 ரன்களை அடித்து 2 முறை விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளனர். ஆதலால், இந்தியாவிற்கு இது ஒரு சவாலான சுற்றுப்பயணமாக இருக்கும்,” என ஜாஃபர் தெரிவித்தார்.

இத்தொடரை குறித்து மேலும் அவர் கூறுகையில், “இத்தொடரில்,இந்தியா 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு அதிகம். இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் தங்கள் அணியை நிலைநிறுத்துவார்கள். ஏனெனில், இந்தியாவின் வேகப்பந்துவீச்சு இப்போது மிகவும் அனுபவம் வாய்ந்ததாகவுள்ளது. இதில், பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு தாக்குதல் முதல் தரம்.

இந்திய அணியின் பேட்டர்கள் பலகையில் ஸ்கோரை வைப்பதே சவாலாக உள்ளது. அதுதான் பிரச்சனை. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில், 2018-ல் விராட் மட்டுமே ரன்களை எடுத்தார். மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், விராட் கோலியே கடந்த 2 ஆண்டுகளாக  21 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 5 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆதலால், இத்தொடரில், ஒரு சதத்தை விளாசி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தற்போது,முதல் ஆறு வரிசையில் இந்தியாவின் பேட்டிங் சமநிலையில் உள்ளது.இதில்,ரிஷப் பந்த் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் பேட் செய்தால் ஆட்டத்தை மாற்ற முடியும் .மேலும், அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர்; அவர்கள் விராட்டை சுற்றி பங்களிக்க வேண்டும்,” இவ்வாறு ஜாஃபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.