தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் ஆடும் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் விரும்புகிறார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100271

மும்பை: ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அணியை வீழ்த்திய போதும், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றிகண்டது.

இத்தோல்வியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் 2வது இடத்திற்கு சென்றுள்ளது. இருப்பினும் இந்தியா அரையிறுதிக்கு செல்லவேண்டும் என்றால் மீதமுள்ள அடுத்த 2 போட்டிகளிலும்  வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்தி வெற்றிபெற்றால் மட்டுமே முடியும் என்ற சூழல் உள்ளது.

இந்நிலையில் அணியில் நடந்த தவறுகளை சரி செய்துக்கொண்டு அடுத்த 2 போட்டிகளில் களமிறங்கவுள்ள இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஹர்பஜன் சிங். மேலும் அந்த மாறங்களை பற்றி பேசிய ஹர்பஜன் சிங், அதுகுறித்து கூறுகையில்,”தற்போது சில கடினமான முடிவுகளை இந்திய அணி எடுத்தாக வேண்டும்.கே.எல் ராகுல் சிறந்த வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்ல அவர் மேட்ச் வின்னரும் கூட. ஆனால் அவரின் ஃபார்ம் தற்போது மோசமாக உள்ளதால் தடுமாறிவருகிறார். எனவே ராகுலை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்-ஐ அணியில் எடுத்து ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக இறக்கினால் இடது-வலது காம்பினேஷன் கிடைக்கும். அது அணிக்கும் நல்லது.

மேலும் நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக் காயம்காரணமாக வெளியேறியுள்ளார். ஒருவேலை தினேஷ் கார்த்திக் ஆடவில்லை என்றால், அவருடைய இடத்திற்கு தீபக் ஹூடாவை கொண்டு வர வேண்டும். ஹூடா மூலமாக ஒரு கூடுதல் பவுலரும் அணிக்கு கிடைப்பார்.

அடுத்ததாக ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மாற்றாக யுஸ்வேந்திர சாஹலை சேர்க்க வேண்டும். அஷ்வினை அவருடைய அனுபவத்துக்காக மட்டுமே அணியில் எடுத்திருக்கின்றனர். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தால் ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் சாஹல் உலகின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர். ஒரு நல்ல பவுலர், இடது-வலது என்று எந்த பேதமும் இல்லாமல் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் சிறப்பாக பந்துவீசுவார். அப்படியான ஸ்பின்னர் தான் சாஹல். சில ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். அணிக்கு விக்கெட்டை வீழ்த்தக்கூடிய ஸ்பின்னர் தான் தேவை. எனவே அஷ்வினுக்கு பதிலாக சாஹலை சேர்க்க வேண்டும்” இவ்வாறு ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் ஆடும் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் விரும்புகிறார்."

Leave a comment

Your email address will not be published.


*