தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

www.indcricketnews.com-indian-cricket-news-100261
India lost a heavyweight clash with South Africa by 5 wickets India lost a low-scoring thriller by 5 wickets against South Africa at Optus Stadium. Defending a target of 134, Indian bowlers did their best to take the game into the final over. But luck was not in India’s favor as the men in blue missed a few run-out chances on the field. Aiden Markram and David Miller fought a good battle to clinch victory for their side in a nail-biter.

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று பெர்த்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா 15(14) மற்றும் கே.எல்.ராகுல் 9(14) ஆகிய இருவரையும் 5வது ஓவரில் வீழத்திய லுங்கி இங்கிடி, தொடர்ந்து வந்த விராட் கோலியை 12(11) ரன்கள் எடுத்தபோது வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா ரன் ஏதுமின்றி நோர்ட்ஜே பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா 2(3) ரன்களுடன் இங்கிடி பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இதனால் இந்திய அணி 8.3 ஓவர்கள் முடிவில் 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆனால் இதற்கிடையே களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் விளாச, தொடர்ந்துவந்த தினேஷ் கார்த்திக் 6(15), ரவிச்சந்திரன் அஷ்வின் 7(11) ஆகியோர் சொற்ப ரன்களுடன் வெய்ன் பார்னெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இறுதியில் சூர்யகுமார் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 68(40) ரன்கள் எடுத்தபோது வெய்ன் பார்னெல் வீசிய 19வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் முகமது ஷமி ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 1(3) ரன்னுடன் அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரின் முதற்பந்தில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரைலீ ரூஸோவ் அதே ஓவரின் 3வது பந்தில் ரன் ஏதுமின்றி எலிபிடபள்யூ முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

மறுமுனையில் கேப்டன் டெம்பா பவுமா வழக்கம்போல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 10(15) ரன்களுடன் முகமது ஷமியின் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். ஆனால் அதன்பின்ன்ர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம்-டேவிட் மில்லர் ஜோடியில் அரைசதம் கடந்து அசத்திய மார்க்ரம் 52(41) ரன்கள் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழக்க,  மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மில்லர், அஷ்வின் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார்.

ஒருபுறம் ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6(6) விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினாலும், மறுபுறம் மில்லர் தனது அதிரடியால் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் இறுதியில் 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதில் 59(46) ரன்களுடன் மில்லர் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்திலிருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."

Leave a comment

Your email address will not be published.


*