தென்ஆப்பிரிக்கா 284 ரன்னில் ஆல்-அவுட், விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மற்றும் இங்கிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. விக்கெட் கீப்பரான குயிண்டன் டி காக் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

செஞ்சூரியன் டெஸ்டில் டி காக் பொறுப்பான ஆட்டம். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு  277 ரன்கள் எடுத்துள்ளது. பிலாண்டர் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 4 விக்கெட்டும்,  ஸ்டூவர்ட் பிராட்  3 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

மார்க்ராம் (20 ரன்), ஜூபைர் ஹம்சா (39 ரன்), அறிமுக வீரர் வான்டெர் துஸ்சென் (6 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (29 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் நடையை கட்ட தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 111 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. மற்றும் இந்த சூழலில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் அணியை தூக்கி நிறுத்தினார். பிரிட்டோரியசின் (33 ரன்) ஒத்துழைப்புடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்ட வைத்த குயின்டான் டி காக் துரதிர்ஷ்டவசமாக 95 ரன்களில் (128 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆகிப்போனார். மற்றும் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. மற்றும் இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.  மற்றும்  இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிலாண்டருடன் அன்ரிச் நார்ஜ் களம் இறங்கினார். பிலாண்டர் 35 ரன்னில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 284 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பிலாண்டர் விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், சிப்ளி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Be the first to comment on "தென்ஆப்பிரிக்கா 284 ரன்னில் ஆல்-அவுட், விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது"

Leave a comment

Your email address will not be published.


*