துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ்: களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் துபாய் சென்ற நிலையில் தற்போது சென்னை அணியும் துபாயில் இறங்கியுள்ளது.

பயணத்திற்கு முன்பு வீரர்கள் அனைவருக்கும் பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. துபாய் சென்றவுடன் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள். 1, 3 மற்றும் 6 ஆகிய நாட்களில் கொரோனா பரிசோதனை நடைபெறும் அதில் தொற்று உறுதியாகாத பட்சத்தில் ஐபிஎல் குழுவினருக்கு உருவாக்கப்பட்ட மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் சென்றுவிடுவார்கள். வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை கட்டாயம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சென்னை அணி வீரர்கள் மஞ்சள் நிற ஆடை மற்றும் முகக் கவசத்துடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இதற்கு முன்பு, பயணம் மேற்கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் அணி வீரர்கள் ஹோட்டல்களில் நுழையும் போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகளும் நேற்று துபாய்க்கு பயணம் சென்றுள்ளது. எஞ்சியுள்ள சன் ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இந்த வார இறுதியில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளன.

துபாய், ஷார்ஜா, அபுதாபி மைதானங்களில் 53 நாட்களில் 60 போட்டிகள் நடத்தி முடிக்கப்படும். இதற்கு முன்பு, 2014 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது, ஐபிஎல் 13ஆவது சீசனும் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடம் மாறியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிய உள்ள இந்த ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதன்முதலில் இறுதிப் போட்டி ஞாயிறுக் கிழமைக்குப் பதில் செவ்வாய்க் கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மதியம் மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ள போட்டிகள் வழக்கத்தை விட 1:30 மணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் 13ஆவது சீசன் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடியும். மொத்தம் 53 நாட்கள் நடைபெற உள்ள போட்டியில், 10 போட்டிகள் மதிய வேளையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.கே.வின் பயிற்சி அமர்வுகளின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பதன் மூலம் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் சகோதரத்துவத்தை ஆச்சரியப்படுத்தினார்.

Be the first to comment on "துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ்: களைகட்டும் ஐபிஎல் திருவிழா!"

Leave a comment

Your email address will not be published.


*