தவான் தேற மாட்டார்… அந்த இடத்த நிரப்ப ஒருத்தர் இருக்கார்: இந்திய வீரர் பரிந்துரை!

Suryakumar_Yadav_Twitter
Suryakumar_Yadav_Twitter

டி20 அணியில் துவக்க வீரர்களை மாற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தேவங் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மார்ச் 12 முதல் 20ஆம் தேதி வரை அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான, வீரர்கள் பட்டியலை இந்திய அணி சமீபத்தில் வெளியிட்டது. துவக்க வீரர்களுக்கான இடங்களில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல் போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் ஓபனராக களமிறங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இருவரின் பெயரை இந்திய அணியின் முன்னாள் வீரர் தேவங் காந்தி பரிந்துரை செய்துள்ளார்.

“ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரையும் ஓபனர்களாக தேர்வுசெய்ய வேண்டும். டி20 உலகக் கோப்பையிலும்தான். வேண்டுமென்றால், ஷிகர் தவனை ரிசர்வ் ஓபனராக வைத்துக்கொள்ளலாம். ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை” எனத் தெரிவித்தார். ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

ஐபிஎல் 13ஆவது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக ராகுல் துவக்க வீரராக களம் கண்டு ரன் வேட்டையில் ஈடுபட்டார். இறுதியில், அதிக ரன்கள் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியைச் சிறப்பாக வழிநடத்தி ஐந்தாவது முறையாக அணிக்குக் கோப்பை வென்று கொடுத்தார். மேலும் பேசிய காந்தி, சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என்றார். “மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றதற்கு சூர்யகுமார் யாதவ்தான் முக்கிய காரணம். அதிரடியாக விளையாடியதை அனைவரும் பார்த்தோம். இவரை இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கொடுத்தால் நல்லது. திறமையான வீரர்” எனத் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்ததும், மார்ச் 23ஆம் தேதிமுதல் ஒருநாள் தொடர் ஆரம்பமாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான டீம் இந்தியாவின் முதல் போட்டிக்கான லக்ஷ்மனின் சாத்தியமான லெவன் இங்கே ஒரு பார்வை:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹார்டிக் பாண்ட்யா, ஆக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், டி நடராஜன்

Be the first to comment on "தவான் தேற மாட்டார்… அந்த இடத்த நிரப்ப ஒருத்தர் இருக்கார்: இந்திய வீரர் பரிந்துரை!"

Leave a comment