தனது பதவிக்காலத்தில் எந்தவொரு வடிவங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படமாட்டது என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0064

ஜெய்ப்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வரும் நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று  நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டி20ஐ கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் செவ்வாய்க்கிழமையான நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடர் குறித்து உரையாற்றினர். 

நியூசிலாந்து அணியுடனான இத்தொடரைக் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் இந்திய  கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் கூறுகையில்,“நியூசிலாந்து அணியின் வீரர்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது. ஏனென்றால் அவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

பல்வேறு தருணங்களில் அவர்கள் நமது இந்திய அணியை  வீழ்த்தி உள்ளனர். இருப்பினும், நமது அணி அவர்களை வெற்றி கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.” வீரர்களின் வேலைப்பளு குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், தனது மேலாண்மைக்கு கீழ் செயல்படும் இந்திய அணிக்கு குறிப்பிட்ட வடிவத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதை தவிர்த்து  டி20 உலகக்கோப்பை தொடர், சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை தொடர்,  உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடர் என இந்திய அணி அனைத்து தொடர்களிலும் வெவ்வேறு வடிவங்களில் முற்றிலும் வேறுபட்ட அணிகளைப் பார்க்க வேண்டி இருப்பதால் எங்களது கவனம் எல்லாவற்றின் மீதும் இருக்கும்.

ஒருசில பயிற்சிக் கொள்கைகள் மாற்றியமைக்க முடியாது ஆனால் ஒரு சில அணிகளுடன் விளையாடும் சமயத்தில் அதற்கேற்ப கொள்கைகள் நிச்சயம் மாற்றியமைக்கப்படும். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு வடிவத்தில் திறமையானவர்கள் அதனால்  சிறந்த வீரர்களைப் பெறுவதற்கு என்னைப் புரிந்துகொள்வதற்கும், என்னை உருவாக்குவதற்கும் நேரம் எடுக்கும் .

கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டு வீரர்களுக்கு வேலைப்பளு மிக அதிகம் குறிப்பாக இந்திய வீரர்களுக்கு. “கால்பந்து போட்டிகளை போல கிரிக்கெட்டிலும் வீரர்களுக்கு ‘வேலைப்பளு மேலாண்மை’ நாம் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். வீரர்களின் மனநலமும் உடல் நலமுமே நமக்கு பிரதானம். அதனை கருத்தில் கொண்டு, வீரர்களை சமநிலை படுத்துவது மிக முக்கியம்.

ஏனென்றால் எதிர்காலத்தில் பெரிய கிரிக்கெட் தொடர்களுக்காக வீரர்களை தயாராக வைக்க வேண்டும். வீரர்கள் இயந்திரங்கள் அல்ல. அனைத்து வீரர்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்களா என கண்காணித்து வருகிறோம்.” இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "தனது பதவிக்காலத்தில் எந்தவொரு வடிவங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படமாட்டது என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*