தட்டி தட்டியே வெற்றி பெற்ற கேகேஆர்… கைகொடுத்த கேப்டன்.. பௌலிங்கில் அதிரடி காட்டிய கொல்கத்தா!

Eoin Morgan leads KKR run chase after Tripathi, Russell fall
Eoin Morgan leads KKR run chase after Tripathi, Russell fall

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 21வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியாக அகமதாபாத்தில் இன்றைய போட்டி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த போட்டியின் வெற்றியை தொடர பஞ்சாப் கிங்ஸ் அணி தீவிரம் காட்டியது. ஆனால் அந்த அணியின் ஸ்கோரை தனது அதிரடி பௌலிங்கில் சுருக்கியதுடன் பேட்டிங்கிலும் கேகேஆர் கேப்டன் இயான் மார்கன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 21வது போட்டியில் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்தில் இருந்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனுடனான அந்த போட்டியின் வெற்றி பஞ்சாப் அணிக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. இதையடுத்து அந்த தன்னம்பிக்கையுடன் இன்றைய போட்டியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ஆனால் அந்த அணியின் ஸ்கோரை 123க்கு சுருக்கியது கேகேஆர். கேகேஆர் அணியின் பௌலர்கள் காட்டிய அதிரடியில் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அணியின் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பேட்டிங்கை துவக்கினர். இதனிடையே, அணியின் முக்கிய வீரர்களை துவக்கத்திலேயே அவுட் செய்ய கேகேஆர் தீவிரம் காட்டியது. அதில் வெற்றியும் பெற்றது. இன்றைய போட்டியில் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாசின்போது பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன், சிறப்பான அணி வீரர்களுடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாகவும் சிறப்பான வெற்றியை கேகேஆர் இன்றைய போட்டியில் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை கீழே தள்ளிவிட்டு 2 வெற்றிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் கேகேஆர் இடம் பெற்றுள்ளது. கேகேஆர் அணியில் அனைத்து ஏரியாக்களும் வீக்காக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில் தற்போது இந்த வெற்றி மூலம் அதை பொய்யாக்கியுள்ளது கேகேஆர்.

Be the first to comment on "தட்டி தட்டியே வெற்றி பெற்ற கேகேஆர்… கைகொடுத்த கேப்டன்.. பௌலிங்கில் அதிரடி காட்டிய கொல்கத்தா!"

Leave a comment

Your email address will not be published.


*