டேவிட் மில்லர்-வான்டர் டூசன் அதிரடியால்,புரோடீஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10543

டெல்லி: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்-இஷான் கிஷன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

ஆனால் பவர்பிளே முடிவில் 57 ரன்களை கடந்தபோது ருதுராஜ் கெய்க்வாட் 23(15) ரன்களுக்கு  ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியை காட்ட, மறுமுனையில் இஷான் 37 பந்தில் அரைசதம் கடந்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 9.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.

இந்நிலையில் கேசவ் மகராஜ் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்சர்,2 பவுண்டரி அடித்த இஷான்,அதே ஓவரின் கடைசிபந்தில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 76(48) ரன்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 1 பவுண்டரி,3 சிக்சர் உட்பட 36(27) ரன்கள் எடுத்து பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். 

இதன்பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா-கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடியில் ரிஷப் உட்பட 29(16) ரன்களுக்கு வெளியேற ,மறுபுறம் டெத் ஓவர்களில் அடித்து ஆடிய ஹர்திக் 3 சிக்சர்,2 பவுண்டரி உட்பட 31(12) ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 211 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான டெம்பா பவுமா 10(8) ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக்-டுவைன் பிரிட்டோரியஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 4 சிக்சர்,1 பவுண்டரி அடித்த பிரிட்டோரியஸ் 29(13) ரன்கள் எடுத்தபோது ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டிகாக் 22(18) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் பாட்னர்ஷிப் அமைத்த டேவிட் மில்லர்-வெண்டர் டூசன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வந்தனர். இறுதியில் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் மில்லர் 5 சிக்சர்,4 பவுண்டரி உட்பட 64(31) ரன்களும், வெண்டர் டூசன் 5 சிக்சர்,7 பவுண்டரி உட்பட 75(46) ரன்களும் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .

Be the first to comment on "டேவிட் மில்லர்-வான்டர் டூசன் அதிரடியால்,புரோடீஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது."

Leave a comment

Your email address will not be published.


*