டெஸ்ட் தரவரிசை:ஸ்மித் மீண்டும் முதலிடம், விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

www.indcricketnews.com-indian-cricket-news-14

டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி புதன் கிழமை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும்,முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.ஸ்மித் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (814 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார். கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டாப் 10-இல் இருக்கும் ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின்.ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.மேலும் முதலிடம் பெற்ற ஸ்மித் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை விரைவாக எட்டிய ஆத்திரேலிய பேட்ஸ்மேன் மற்றும் உலகின் ஆறாவது விரைவான பேட்ஸ்மேன் எனும் சாதனையை படைத்தவர்,

ஐசிசி சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற ஒரே வீரர். ஐ.சி.சி தேர்வுத் துடுப்பாட்ட பேட்ஸ்மேன்தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இளைய பேட்ஸ்மேன்என்பது குறிப்பிடப்பட்டது.பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துத்துள்ளது ஐசிசி. விளையாட்டுவீரர்களும் தங்களது திறமையை மேலும் வளர்த்து பட்டியலில் முன்னேற வேண்டுமென்று தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்கள்.

Be the first to comment on "டெஸ்ட் தரவரிசை:ஸ்மித் மீண்டும் முதலிடம், விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம்"

Leave a comment