டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

first team to enter worldcup
first team to enter worldcup

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முடிவு தெரியும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியானது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும். நியூசிலாந்து அணி சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளைத் தனது சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இதில், இந்திய அணிக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் புளு ஆர்மி 2-1 அல்லது 2-0 என வெற்றிபெற்றாலே போதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும். டிரா ஆனால் இந்திய அணிக்கு சிக்கல்தான். ஒருவேளை இங்கிலாந்து அணி 3-1/3-0/4-0 என வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும். இதனால், பிப்ரவரி 5ஆம் தேதி முதல் துவங்கும் இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, உலக டெஸ்ட் சாம்யின்ஷிப்பிற்கான அரை இறுதியாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் பார்க்கின்றனர். இந்திய அணி தனது சொந்த மண்ணில் 2013ஆம் ஆண்டு முதல் 34 டெஸ்ட்களில் பங்கேற்று ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, கடைசி நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்று, செந்த மண்ணில் புளு ஆர்மி பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. நிச்சயம் இது இங்கிலாந்து அணிக்கு கெட்ட செய்திதான்.

2012ஆம் ஆண்டு முதல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியா வந்தபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 4-0 என படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், எதிர்வரும் டெஸ்ட் தொடர் முடிந்தவுடனே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸ் செல்வது உறுதியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்து என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். ஜோ ரூட்டின் ஆண்கள் குறைந்தது 3 போட்டிகளில் வெல்ல வேண்டும் மற்றும் 1 போட்டியை மட்டுமே இழக்க வேண்டும். பின்வரும் தொடர் மதிப்பெண்களில் ஏதேனும் இங்கிலாந்து இந்தியாவைத் தாண்டி இறுதிப் போட்டியைக் காணும்.

Be the first to comment on "டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?"

Leave a comment

Your email address will not be published.


*