டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தன. 

இதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3ம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, விரைவில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்சில் புஜாரா 24 ரன்கள் எடுத்ததே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர்கள் லாதம் 52 ரன்களும், புளுண்டேல் 55 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, டெஸ்ட் போட்டித் தொடரை 2-0 என வென்றுள்ளது. கைல் ஜேமீசன் ஆட்டநாயகனாகவும், டிம் சவுத்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 0-5 என ஒயிட் வாஷ் ஆனது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்விக்கு கோலியின் மோசமான பார்ம், இந்தியாவில் பேட்டிங் பலவீனம் என பல விஷயங்களை காரணமாகக் கூறி, இந்திய வீரர்களை விளாசி வருகின்றனர் விமர்சகர்கள்

டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 3 – 0 மோசமாக தோற்ற போதும் ரோஹித் சர்மா அணியில் இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. தற்போது டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் தோல்வி அடைந்த போதும் அதே காரணத்தை தான் முதன்மையாக கூற வேண்டி உள்ளது.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா துவக்கம் அளித்தனர். இருவரும் ஒரு இன்னிங்க்ஸில் கூட 50 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ளவில்லை. யாரேனும் ஒருவர் ஓரளவு ரன் சேர்த்தால், மற்றவர் விரைவாக ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவர்களின் விரைவான விக்கெட் வீழ்ச்சியால் ஏற்படும் அழுத்தத்துடன் அடுத்து வரும் வீரர்கள் ஆட வேண்டிய நிலை இருந்தது.


Be the first to comment on "டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து"

Leave a comment

Your email address will not be published.


*