டி20 உலகக் கோப்பை: விராட்கோலிக்காக உலகக்கோப்பையை வென்று ஆக வேண்டுமென இந்திய அணி வீரர்களிடம் சுரேஷ் ரெய்னா கேட்டுக்கொண்டார்.

www.indcricketnews.com-indian-cricket-news-058

ஓமன்: ஐபிஎல் 2021 கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தனது விறுவிறுப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து அடுத்ததாக  டி20 உலகக்கோப்பை தொடரின் 7ஆவது சீசன் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி வரும் அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் “ஐசிசி டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை எனது செய்தி ஒன்றே ஒன்று. அது உலகக்கோப்பையை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதே, அவரது தலைமையின் கீழ் விளையாடி கோப்பையை வெல்வதற்கு அவர் தகுதியானவர் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் நடப்பு உலகக்கோப்பை சீசன் தொடர் முடிந்த பின்னர் தலைமை பொறுப்பிலிருந்து  விலகுவதாக விராட் கோலி ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் விளையாடவிருக்கும் கடைசி உலகக்கோப்பை தொடர் இதுவே.  எனவே பிற வீரர்கள் உத்வேகத்துடன் செயல்ப்பட்டு டி20 உலகக்கோப்பை  தொடரின் மதிப்பிற்குரிய கோப்பையை வெல்வதன் மூலம் விராட் கோலிக்கு சரியான ஃபேர்வலை வழங்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே இதே துபாயில் ஐபிஎல் தொடரில் 8 முதல் 10 போட்டிகள் வரை விளையாடி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தகுதியான வீரர்கள் நமது இந்திய அணியில் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இதுவே சரியான தருணம். நாம் இதில் செய்யவேண்டியதெல்லாம் போட்டியில் கலந்து விளையாடி வெற்றி பெருவது மட்டுமே.

“என்னைப் பொருத்தவரையில் இந்திய அணியின் மிகச்சிறந்த துருப்பு சீட்டாக இருக்கப் போவது டாப் 3 பேட்டர்கள் தான். இதில் ரோகித் சர்மா மிக முக்கியமானவர். ஐசிசி போட்டிகளில் அவர் விளையாடி படைத்த ரெக்கார்டுகள் ஏராளம். விராட் கோலி, கே எல் ராகுல்,ரோகித் சர்மா,ஆகியோர் 15 ஓவர்கள் வரை விளையாடி தரமான அடித்தளத்தை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில சிறப்பான ஜோடிகள் மிடில் ஆர்டரில் விளையாட நம்மிடம் உள்ளனர். அதில் ரிஷப் பந்த் மிக முக்கியமானவர். ஹர்திக் பாண்டியா ஒரு பவர் ஹிட்டர். இவர்கள் சரியாக பங்காற்றி விளையாடினாலே போதும் இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அது துச்சம் தான்.

த்ரில்லர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி  அணிக்கு மிக பக்கபலமாக இருப்பார். மேலும் புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் கூடுதல் பலமாக இருப்பர். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் நமது வெற்றிக்கனியாக இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

Be the first to comment on "டி20 உலகக் கோப்பை: விராட்கோலிக்காக உலகக்கோப்பையை வென்று ஆக வேண்டுமென இந்திய அணி வீரர்களிடம் சுரேஷ் ரெய்னா கேட்டுக்கொண்டார்."

Leave a comment

Your email address will not be published.