டி20 உலகக் கோப்பை ஆடும் லெவன் அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேலின் இடம் குறித்து ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-01093

ஹைதராபாத்: அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து , அனைவரது கவனமும் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றமளித்தனர். குறிப்பாக ஹர்ஷல் படேல் மோசமான ஃபார்மில் இருந்தபோதிலும், ரோஹித் ஷர்மா தலைமையின் கீழ் விளையாடும் ஆடும் லெவனில் அவர் இன்னும் ஒரு முக்கியமான கோக் என்று தெரிகிறது.

இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஹித் ஷர்மா, இதுகுறித்து பேசுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெவ்வேறு பேட்டர்கள் நங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது பேட்டிங் பலத்தை காட்டுகிறது.

ஆனால் பந்துவீச்சில் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இன்னும் உள்ளன. குறிப்பாக டெத் ஓவரில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டுவந்த பிறகு சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் ஹர்ஷல் படேல் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

காயத்திற்குப் பிறகு ஃபார்முக்கு திரும்பி வருவது அவ்வளவு எளிதல்ல. நடந்துமுடிந்த மூன்று போட்டியில் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை நாங்கள் மதிப்பிடவில்லை. ஏனெனில் அவரது தரம் எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் இந்திய அணிக்காகவும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் மிகவும் கடினமான ஓவர்களை வீசியுள்ளார்.

அந்த நம்பிக்கையை தொடர்ந்து காட்டுவது முக்கியம் என்பதால், அவரும் தனது தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறார். நான் வலைப்பயிற்சியில் பார்த்தது போல், அவர் பந்துவீச்சில் கடுமையாக உழைத்து வருகிறார். எனவே அவர் சிறந்த நிலைக்கு திரும்ப வெகுதூரம் இல்லை.

ஒருகாலத்தில் டெத்ஓவரில் வல்லுநராக இருந்த புவனேஷ்வர் குமார் தற்போது தடுமாறி வருகிறார். இருப்பினும் அவருக்கான இடத்தை வழங்குவது முக்கியம். ஏனெனில் கடந்த வருடங்களில் மோசமான நாட்களை விட நல்ல நாட்கள் இருந்ததே அவருக்கு அதிகம். ஆனால் எதிர்பார்த்ததுபோல தற்போது பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்படமுடியவில்லை.

இதுபோன்ற நிலை எந்த பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்படலாம். டெத்ஓவரில் பந்து வீசுவது எளிதல்ல. ஆகையால் டெத் ஓவரில் பந்துவீச அவருக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். இதன்பின்னர் அவர் முன்பு இருந்ததைப் போலவே சிறப்பாக செயல்படுவார்.

மேலும், தனிப்பட்ட முறையில்  அவருடன் பேசும்போது  தன்னம்பிக்கைக்கு குறைவில்லை என்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. ஒரு அணியாக அவரது திறமையை நாங்கள் நம்புகிறோம். கடந்த காலங்களில் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயலபட்டுள்ளார். எனவே அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரது திறமையை தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய நேரம் இது” இவ்வாறு ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "டி20 உலகக் கோப்பை ஆடும் லெவன் அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேலின் இடம் குறித்து ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*