டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-010202
India suffered a humiliating defeat against England in the T20 World Cup semi-final India suffered a 10-wicket defeat at the hands of England in the second semi-final of the T20 World Cup. Another ICC World Cup dream shattered for Men in blue as they finished on an embarrassing note. In a big T20 match like the semifinal, the top-order batters should play fearless cricket and score run aggressively than being cautious.England’s opening duo Jos Butler and Alex Hales made a different approach by slaughtering the Indian bowlers and secured a memorable win. After being put in to bat first, India lost its opener KL Rahul very early for just 5. An early loss created pressure on skipper Rohit Sharma and Virat Kohli so they played cautiously and scored runs at a slow rate. Rohit departed after scoring 27 in 28-balls. The most expected batter Suryakumar Yadav failed to make an impact on the scoreboard and went back for 14. India’s star batter Kohli played an anchoring inning and hit his fourth half-century in the tournament. Hardik Pandya, who started patiently, produced some fireworks towards the end. Pandya smashed 63 off just 33-balls and helped India to post a competitive total of 168/6 in 20 overs. For England, Chris Jordan starred with a three-wicket haul. England in response had a terrific start as its skipper Butler and his partner Hales attacked the Indian bowling unit from the very beginning. Both batters played ruthlessly and smashed the ball to all corners. Butler (80*) and Hales (86*) hit commanding fifties and made a mockery of the chase as they romped home with four overs to spare.

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில்  நடைபெற்றுவரும் 2022 டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம்  (நவ:9) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்ட நிலையில், இரண்டாவது ஓவரிலேயே 5(5) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோஹித் ஷர்மா – விராட் கோலி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 27(28) ரன்களுடன் கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திமான சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஆதில் ரஷித்தின் சிறப்பான பந்துவீச்சால் வெறும் 14(10) ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் ஒருமுனையில் விராட் கோலி வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கோஹ்லி, அடுத்த பந்திலேயே கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 6(4) ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, மறுமுனையில் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்த ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸரை விளாசி 63(33) ரன்கள் எடுத்தபோது கிறிஸ் ஜோர்டன் வீசிய கடைசி பந்தில் ஹிட் விக்கெட்டானார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்திய அணியின்  புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், அஸ்வின் என எந்த பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் பட்லர் 80(49) ரன்களும், ஹேல்ஸ் 86(47) ரன்களும் விளாசி மிரளவைத்தனர்.

இதனால் 16 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Be the first to comment on "டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது."

Leave a comment

Your email address will not be published.


*