டி20 உலகக் கோப்பைக்கு நெகிழ்வுத் தன்மையே முக்கியமாகும்: தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

www.indcricketnews.com-indian-cricket-news-097

கொல்கத்த: டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டி  தொடர்ந்து தங்கள் திறமையை வீரர்கள் வெளிப்படுத்தி  வருகின்றனர். இந்நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது;

டி20  உலககோப்பை போட்டிக்கான இந்திய அணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது.குறிப்பாக வீரர்கள் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது மிக முக்கியம் .பேட்டிங் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை  ஆடுகளங்கள் தான் தீர்மானிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் டி20 உலகக்கோப்பை குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில்,  “டி20 போட்டியானது கடினமான ஒன்று .எனவே இப்போட்டிக்குத் தேவையான வளைவு நெளிவுகளை வீரர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில், இந்திய அணியில் உள்ள வீரர்கள் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”என சுட்டிக்காட்டிய அவர், டி20 போட்டிகளில் வீரர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்வேண்டும் எனவும் அதுகுறித்து வீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் “டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி யார் பக்கம் என்பதை உங்களால் கணிக்க முடியாது. எனவே வீரர்கள் பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாடுவதற்கு ஏற்றவாறு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் ,சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரைக்  வீழ்த்த அந்த வளைவு நெளிவு மிக முக்கியமாக உள்ளது.

குறிப்பாக  மிடில் ஆர்டரில் நாங்கள் முன்னேற விரும்புகிறோம். எனவே ஒரு குறுகிய ஆட்டத்தில் சரியான நபர்கள் பேட்டிங் செய்ய வேண்டும்,” என்று டிராவிட் கூறினார். மேலும், உலகக் கோப்பை வருவதற்குள், 10 முதல் 15 ஆட்டங்களில் விளையாடிய இளைஞர்களை இந்திய அணியில் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்று வலியுறுத்திய ராகுல் டிராவிட்டிடம் வெங்கடேஷ் ஐயர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் வெங்கடேஷ் ஐயரிடம் எதிர்பார்த்தது போலவே நெகிழ்வுத்தன்மையின் யோசனையை மிகவும் வசதியாக மாற்றியமைத்தார்.

தொடக்க ஆட்டக்காரரான அவரை, நடுவரிசையில் இறங்க அணி நிர்வாகம் பணித்தது. அந்த வரிசையிலும் தன்னால் விளையாட முடியும் என்பதை கடைசியாக கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி மூன்று போட்டிகளில் 92 ரன்கள் (24, 33, மற்றும் 35) எடுத்ததுடன், இரண்டு போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை தேடிகொடுத்து நிரூப்பித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அதேபோல பவுலிங்கிலும் சீரான வேகம் மற்றும் துல்லியத்தை கடைபிடித்து விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.” இவ்வாறு அப்பேட்டியில் தெரிவித்தார்.