டி20 உலகக்கோப்பை 2021 முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா அணி

www.indcricketnews.com-indian-cricket-news-0054

துபாய்: ஐசிசி 7வது டி20 உலகக் கோப்பை 2021 மகுடத்தை சூட்டப்போவது யார் என்ற கேள்வியுடன் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (நவ்: 15) இறுதிப் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து- ஆஸ்திரேலியா  அணிகள் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளும் அனல் பறக்க மோதின.

இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறி பவர்பிளேயில்  ஹேசில்வுட் வீசிய 4-வது ஓவரில் டேரில் மிட்செல் 11 ரன்களில் வெளியேறினார்.  அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் 11வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேன் வில்லயம்சன்  கொடுத்த எளிய கேட்ச்சை ஹேசில்வுட் கோட்டை விட்டார். 

மறுமுனையில் கப்தில் 3 பவுண்டரி உட்பட 28 (35) ரன்களுக்கு ஆடம் ஜம்பாவின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் அடுத்த ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடி 10 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 85(48) ரன்களை குவித்து கேன் வில்லியம்சன் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில்  4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி போல்ட்  வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஃபின்ச் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து களம் கண்ட மிட்செல் மார்ஷ் -வார்னர் ஜோடியில் சிறப்பாக ஆடிய வார்னர்  4 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 53(38) ரன்களுடன் டிரென்ட் பவுல்ட்டின் பந்தில் வெளியேறினார்.

மறுபுறம்  மார்ஷ் 6 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 77(50) ரன்களும், வார்னருக்கு பின் களமிறங்கிய மெக்ஸ்வெல் 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 28 (18) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 18.5  ஓவரில் 2 விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணி வெற்றிக்குத் தேவையான 173 ரன்களை எடுத்து வென்றது. மிட்செல் ஆட்டநாயகன் விருதையும், வார்னர் தொடர் நாயகன் பட்டத்தையும் வென்றனர்.

உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல் முறையாகும். சூப்பர் 12 சுற்றில் கடினமான க்ரூப்பிலும் தரவரிசை பட்டியலில் 6வது இடத்திலும் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்ற பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்தினர். இருப்பினும், ஐசிசி தொடர் என்பதாலே மற்ற அணிகளை அலறவிட்டு ஆஸ்திரேலியா அணியும் அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரும் சூப்பர் கம்பேக்கை கொடுத்துள்ளார்.

ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீழ்வது இது 4-வது முறை. அதிகபட்சமாக இங்கிலாந்து 6 முறையும், இந்தியா 5 முறையும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை 2021 முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா அணி"

Leave a comment

Your email address will not be published.


*