டி20 உலகக்கோப்பை 2021: இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது கடைசி பயிற்சி ஆட்டத்திற்காக பேட்டிங் வரிசையை இன்று சரிபார்க்கிறது.

www.indcricketnews.com-indian-cricket-news-069

துபாய்: சர்வதேச டி20 உலகக்கோப்பை 2021 தொடரானது கடந்த மாதம் அக்.17ஆம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில்  சூப்பர் 12 பிரிவு போட்டிகளானது வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இதில் இந்திய அணியானது பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி முதல் போட்டியாக பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று எதிர்கொள்கிறது.

இதற்கு  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் இரண்டு பயிற்சி போட்டிகளை இந்திய அணி மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைப்பெற்ற முதலாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  அபாரமாக வெற்றி பெற்றது.

இருப்பினும் இந்திய வீரர்கள் பந்துவீச்சில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இங்கிலாந்து அணி களமிறங்கி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களும் தெரிக்கவிடப்பட்டன. 

இதில் ஆல்ரௌண்டர் ஹார்திக் பாண்டிய பந்துவீச்சை செய்யாமல்  பேட்டர்லையே தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இந்த டி20 உலகக்கோப்பையில் முகமது ஷமி, பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார்  ஆகியோருடைய வேகப்பந்துவீச்சையே பெரிதும் நம்பியுள்ளது.

மேலும் நடந்த போட்டியில்  புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களை வீசி மொத்தமாக 54 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வாரி வழங்கியும் ஒரு விக்கெட்டை கூட அவர் எடுக்கவில்லை. இதே போல மற்றும் ஒரு முன்னனி வீரரான முகமது ஷமி 4 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். அஸ்வின் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக 2017ஆம் ஆண்டு வரை சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அவர், அதன் பின்னர் நேற்று தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசியும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் அனைவருக்கும் அவர் மீதிருந்த சந்தேகங்கள் இந்த ஆட்டத்தின் மூலம் விலகியுள்ளது.

பும்ராவும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினார். இந்த முதலாவது பயிற்சி போட்டியில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் துபாயில் இன்று நடை பெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் சரி செய்வார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் 72 போட்டிகளில் விளையாடி 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை 2021: இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது கடைசி பயிற்சி ஆட்டத்திற்காக பேட்டிங் வரிசையை இன்று சரிபார்க்கிறது."

Leave a comment

Your email address will not be published.