டி20 உலகக்கோப்பை தொடர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கங்குலி..

www.indcricketnews.com-indian-cricket-news-69

மும்பை: டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்தாண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில,.ஐபிஎல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிசிசிஐ-க்கு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளது ஐசிசி அமைப்பகம்.இந்தாண்டு2021-ல் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தொடரை இங்கு நடத்த பல நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் இதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எனவே, இதனையடுத்து பிசிசிஐ பதிலளிக்க ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது ஐசிசிஅமைப்பு. எனினும் இந்தியாவில் தான் டி20 உலக்கோப்பை தொடர் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் திட்டவட்டமாக  தெரிவித்து வந்த நிலையில் காலவகாசம் முடிவடைந்துள்ளதால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது முடிவை தெரிவித்துள்ளார். அதில், டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ஐசிசி-யிடம் பதிலளித்துவிட்டோம் எனக்கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையும் அமீரகத்தில் நடைபெறுவது உறுதியாகத் தெரியவந்துள்ளது.இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதிவரை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்ததாகக் கூறப்படுகிறதுஇதன்படி, ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அப்படி பார்த்தால் ஐபிஎல் முடிந்த இரண்டே நாட்களில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.டி20 உலகக்கோப்பை தொடர் 2 நாடுகளில் நடைபெறும் என தகவல்அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ஓமனில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பிறகு சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்குள்ள 3 மைதானங்களும் தயார்படுத்தப்பட ஏற்ப்பாடுகள் எடுப்பதாக தகவல்கள் தெரிந்துள்ளது.இதையறிந்த ரசிகர்கள் மத்தியில் உற்ச்சாகமும், ஆர்வமும் மிகுந்துக் காணப்படுகிறது. இந்த முறையாவது இந்தியா தனது வெற்றியை நிலைநாட்டுமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கங்குலி.."

Leave a comment

Your email address will not be published.


*