டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-0003

துபாய்: டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் வெற்றிபெறும்  அணி அரையிறுதிக்கு செல்லவது கிட்டதட்ட உறுதியாகிவிடும் என்ற நிலையில் நேற்று நியூசிலாந்து அணி டாஸ் வென்று  பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் -இஷான் கிஷான் ஜோடியில் இஷான் 3வது ஓவரில் 4 ரன்களுடன் சவுதி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்-டவுனில்  களமிறக்கப்பட்ட ரோகித் ஷர்மா 14 (14) ரன்களுடன் ஆடம் மில்னேவுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஓபனர் கே.எல்.ராகுல்  சவுதி வீசிய பந்தில் 18 (16) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.  மேலும் விராட் கோலி 9 (17)ரன்கள் ,ரிஷப் பந்த் 12 (19) ரன்கள், ஹார்திக் பாண்டியா 23 (24) ரன்கள் என பெரிய ஸ்கோர் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷர்தூல் தாகூரும் 0 (3) ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இறுதியில் களமிறங்கிய ஜடேஜா 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 26(19) ரன்கள்  சேர்த்ததால் இந்தியா 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின்  பௌலர் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்களையும்  இஷ் சோதி 2விக்கெட்களையும் , மிலென் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

111 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தீல் 3 பவுண்டரி உட்பட 20 (17) ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 4 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 49 (35)ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் 33 (31) ரன்கள் , டிவோன் கான்வே 2 (4) ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்து  14.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து  2 விக்கெட் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். பும்ரா மட்டுமே 2 /19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர் 1.3

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது."

Leave a comment

Your email address will not be published.


*