டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் நட்சத்திர வீரர்களை துபாயிலேயே இருந்து வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-045

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்று முடிந்து அடுத்த இரண்டு நாட்களிலேயே டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம்  தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. விராட் கோலியின் தலைமையில் விளையாடப்போகும் கடைசி டி 20  உலகக்கோப்பை தொடர் இதுவே. இதுவரை அவரின் தலைமையில் டி20 தொடரில் கோப்பையை கைப்பற்றியதில்லை என்றாலும் இம்முறை அந்த எண்ணத்தை முறியடித்து இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லி கேப்பிடல்ஸ்ன் வேகப்பந்து வீச்சாளரான அவெஷ் கானை ஐபிஎல் முடிந்த பின்பு துபாயிலேயே இருந்து இந்திய அணியின் நிகரப்பந்து வீச்சாளராக டி 20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளது. 24 வயதான இவர் காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளரான உம்ரன் மாலிக்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த ஐபிஎல்-இல்  23 விக்கெட்டுகளை எடுத்து ஹர்ஷல் படேல்(32) ஐ தொடர்ந்து அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற வரிசையில் அவெஷ் கான் உள்ளார். வரும் டி20 தொடரில் இந்திய அணியை தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திடுவார் என்று கிர்க்கெட் வாரியம் மற்றும் தேர்வாளர்களால் கூறப்படுகிறது.

 மேலும் ஆர்சிபி அணியின் பௌலர்  ஹர்ஷல் படேல், கே கே ஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் பௌலரான வெங்கடேஷ் ஐயர்  இருவரும் துபாயிலேயே இருந்து  டி20 போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவித்துள்ளது. தற்போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் ஆல் ரௌண்டர் ஹார்திக் பாண்டியா  முதுகுவலி பிரச்சனையால் ஐபிஎல் 2021 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசவில்லை பேட்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் பிசிசிஐ கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஹார்திக் பாண்டியா இந்த மூன்று நாட்களில் பந்துவீச தயாராகி விடுவார் என்று பிசிசிஐ மருத்துவர்கள் உறுதிபடக் கூறியிருப்பதால், அக்டோபர் 15ஆம் தேதி வரை அவரின் பந்துவீச்சை பார்த்துவிட்டு, அதன் பின்னரே அவர் குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. அவரால் பௌலிங் செய்ய முடியாமல் போனால் அவருக்கு பதில் ஷார்துல் தாகூர் அல்லது தீபக் ஷாகர்  தேர்வு செய்யப்படுவர். இதனால், அக்டோபர் 15ஆம் தேதி முடிவில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

 இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் ஆடுவதால் அணியில் மாற்றம் செய்ய வருகிற 15 ம் தேதி வரை அவகாசம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் நட்சத்திர வீரர்களை துபாயிலேயே இருந்து வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.