டி20 உலகக்கோப்பை: எங்களுக்கு போதுமான தைரியம் பத்தல’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0008

துபாய்: அக்டோபர் 31 ஆம் தேதி ஆடவர்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் களம் கண்டன.  தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்த இந்திய அணி  பந்துகளை எதிர்கொள்ளும் போது வீரர்களில் ஒருவர் கூட பெரிய ரன்கள் எடுக்காமல் தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர். 

இதனால், இந்திய அணியின் ஸ்கோர் துவக்கம் முதலே சரிவை நோக்கி சென்றது. முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் கே எல் ராகுல் 16(18), இஷான் கிஷான் (4), ரோஹித் ஷர்மா 14 (14), கோலி 17(9) குறைவான ரன்களை எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில், இறுதியில் ஹார்திக் பாண்டியா 23 (24), ரவீந்திர ஜடேஜா 26 (19) ஆகிய இருவரும் ரன்களை ஓரளவுக்கு எடுத்தனர்.

ஆகையால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது. டிரன்ட் போல்ட் 3(20)விக்கெட்களை எடுத்து இந்திய அணியை திணறடித்தார். 111 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியில்  மார்டின் கப்தீல் 20 (17), டேர்ல் மிட்செல் 49 (35) அதிரடியாக விளையாடி அசத்தினார்.

வில்லிம்சன் 33 (31), டிவோன் கான்வே 2 (4) இருவரும் இறுதிவரை களத்தில் இருந்ததால் 14.3 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் எடுத்து 2 விக்கெட் இழப்புக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது. இதனால்,இந்திய அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு  செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம்.

 இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில்  “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் தொடக்கத்திலேயே தயங்கினோம். அந்த அணியை செயல்பட்டது போல பேட்டிங்,  பந்துவீச்சு இரண்டிலும் நாங்கள் தைரியமாக செயல்படவில்லை . குறிப்பாக, பேட்டிங் செய்யும் போது தடுமாற்றத்துடன் செயல்பட்டோம். பாடி லாங்குவேஜ் பந்துவீச்சின் போது சுத்தமாக இல்லை.

மேலும் அழுத்தத்தில் இருந்ததால் கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் ரன்களை குவிக்காமல் பெரிய ஷாட் அடிப்போமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்ததால் பெரிய ஷாட் அடிக்க முற்படும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தழுவினோம்.ஆனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என கோலி அதிர்ச்சிகரமான பேட்டியை அளித்துள்ளார்.

இந்திய அணி முதல்  போட்டிகளில் பாகிஸ்தானிடமும் இரண்டாவதாக நியூசிலாந்து அணியிடமும் தோற்றுள்ளது. இதனால் அதிக நெட் ரன் ரேட் பெற ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றே ஆக வேண்டும். மேலும் நியூசிலாந்து அணி நமீபியா அல்லது ஸ்காட்லாந்து அணிகளிடம் தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு அரையிறுதிக்கு உண்டான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை: எங்களுக்கு போதுமான தைரியம் பத்தல’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*