டி 20 உலகக் கோப்பையின் தலைவிதியை தீர்மானிக்க ஐ.சி.சி நாளை கூடுகிறது

உலகக் கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாகப் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத ஐசிசி, நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் உலகம் முடங்கியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு வருவதால், உலகக் கோப்பை டி20 தொடரும் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆகையால், உலகக் கோப்பை டி20 தொடரை நடத்த இயலாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக, நாளை நடைபெற உள்ள ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை டி20 தொடர் குறித்து ஐசிசி எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐசிசி சார்பில் நாளை சில அறிவிப்புகள் வெளியாகும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

“தற்போது, ஆசிய கோப்பை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடரை நடத்த முடியாது என்று ஆஸ்திரேலிய திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், ஐசிசி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும்” என்றார்.

இந்த ஆண்டில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்குச் சாத்தியம் இல்லை. 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைகள் நடைபெற உள்ளது. இடையில் 2022-ஆம் ஆண்டு காலியாக இருக்கும்.

நாளைய தினத்தில் ஐசிசி சார்பில் அறிவிப்புகள் வெளியான உடனே ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என்று கூறப்படுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தச் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஐபிஎல் தொடரைத் துபாயில் நடத்த வேண்டும் என்று அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாகத் துபாய் அரசிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

டி 20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பது சபை வீழ்ச்சிக்கான வருவாயைக் கணிசமாகக் காணும் மற்றும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் போட்டியை விளையாடுவதும் நம்பத்தகாதது, எனவே திங்களன்று ஐ.சி.சி என்ன முடிவு செய்கிறது என்பதை எதிர்நோக்குவது சுவாரஸ்யமாக இருக்கும்.

Be the first to comment on "டி 20 உலகக் கோப்பையின் தலைவிதியை தீர்மானிக்க ஐ.சி.சி நாளை கூடுகிறது"

Leave a comment

Your email address will not be published.


*