டி 20 உலகக்கோப்பை 2021: நேற்று நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்றது .

www.indcricketnews.com-indian-cricket-news-074

துபாய்: சர்வதேச டி20 உலகக்கோப்பை 2021 தொடரானது கடந்த மாதம் அக்.17ஆம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதற்காக  இந்திய அணிக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் இரண்டு பயிற்சி போட்டிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் அக்டோபர் 18ம் தேதி இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் பயிற்சி போட்டியில்  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதை போலவே நேற்று ( அக்:20) நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1 ல் இடம் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியும் க்ரூப்:2 ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா அணியும் துபாயில் அமைந்துள்ள ஐசிசி அகாடெமி மைதானத்தில்  இந்திய நேரப்படி நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் வீரர்களான டேவிட் வார்னர்  1 (7) ரன்னும், கேப்டன் ஆரோன் பிஞ்ச்  1 பவுண்டரி உட்பட 8(10) ரன்னும் மிட்செல் மார்ஷ் 1 பவுண்டரியுடனும் ,ஸ்டீவ் ஸ்மித் 7 பவுண்டரி உட்பட 57 (48) ரன்களும் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி உட்பட 41(37) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டோனிஸ் 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 41(25) ரன்களும் , விக்கெட் கீப்பர் மாத்யூ வேடு 1 பவுண்டரி மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர் .இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 152 ரன்களை எடுத்தது.

இதில் புவனேஷ் குமார்  1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டையும், அஸ்வின் தனது சிறப்பான பந்துவீச்சால்  2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல்-ரோகித் ஷர்மா ஜோடி களமிறங்கினர். இதில் கே எல் ராகுல் 3 சிக்ஸர் 2 பவுண்டரி உட்பட 39 (31) ரன்களுடன் ஆட்டமிழந்தார் அடுத்ததாக ரோகித் ஷர்மா 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 60(41) ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வெளியேறினார்.

மேலும் சூர்யகுமார் யாதவ்  1 சிக்ஸர் 5 பவுண்டரி உட்பட 38(27) ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமலும் கடைசி ஆட்டத்தை சிறப்பாக விளையாடிய  ஹார்திக் பாண்டியா வெற்றி பெற 13 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து 14(8) ரன்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியாக 19.5 ஓவருக்கு 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.

Be the first to comment on "டி 20 உலகக்கோப்பை 2021: நேற்று நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்றது ."

Leave a comment

Your email address will not be published.