டி 20 உலகக்கோப்பை 2021: இந்திய அணியின் 5 வீரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-079

 டெல்லி: 7வது டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 24ம் தேதி ‘சூப்பர்-12’ சுற்றின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இத்தொடரில் ஐந்து இந்திய கிரிக்கெட்  வீரர்கள் இப்போட்டியின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி: கேப்டன் விராட் கோலி இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடரில் 90 மேட்ச்களில்  3159 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2012-2016ம் ஆண்டு வரை நடந்த டி 20 போட்டிகளில் 254 ரன்களை குவித்து 84.66 சராசரியுடன் உள்ளார். மேலும், 118.69 ஸ்ட்ரைக் ரேட்  பெற்றுள்ளார். இத்தொடரின் முடிவில் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முன் வெற்றிக் கோப்பையை பெற இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது.

ரோகித் ஷர்மா: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோகித் சர்மா சர்வதேச டி 20 தொடரில் இதுவரை 111 மேட்ச்களில் 2864 ரன்களை குவித்து உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்ற பாராட்டுக்குறியவர். இதுவரை பாகிஸ்தானை எதிர்த்து 16 போட்டிகளில் விளையாடி 720 ரன்கள் பெற்று 51.42 சராசரியுடன் உள்ளார்.உலகக் கோப்பை தொடரின் வரலாற்றிலேயே அதிக சதங்களை பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஜஸ்பிரித் பும்ரா: இந்திய அணிக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நம்பிக்கை நட்சத்திரம் ஆவார். டெத் ஓவர்களில் பந்துவீசுவதிலும், ரன்கள் குவியாமல் கட்டுப்படுத்துவதிலும்,  விக்கெட்டுகளை சிறப்பாக வீழ்த்துவதிலும் முக்கியமான பங்குவகிக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை  59 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.இதை போலவே நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்த்: ரிஷப் பந்த் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர். சர்வதேச டி20 தொடரில் இதுவரை 33 போட்டிகளில்  512 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல்-ல் 16 போட்டிகளில் 419 ரன்களை குவித்து 34.91 சராசரியுடன் உள்ளார்.

வருண் சக்ரவர்த்தி: இந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் மர்ம சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 உலகக்கோப்பை தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் ல் 17 ஆட்டங்களில் 18 விக்கெட்டை வீழ்த்தி 6.58 சராசரியுடன் உள்ளார்.

Be the first to comment on "டி 20 உலகக்கோப்பை 2021: இந்திய அணியின் 5 வீரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்."

Leave a comment

Your email address will not be published.