டி 20 உலகக்கோப்பை 2021: இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-065

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வரும் 24-ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 20 ஆகிய இரண்டு  நாட்களில் தனது பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி விளையாட உள்ளது.

அதன்படி நேற்று (அக்: 18) நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1-ல் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணியும் க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா அணியும் துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில்  இந்திய நேரப்படி நேற்று மாலை 7.30 மணிக்கு களம் கண்டது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 3 பவுண்டரி உட்பட 18 (13)ரன்கள், ஜேசன் ராய் 2 பவுண்டரி உட்பட 17 (13) ரன்கள் எடுத்து இருவரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடமும் ஜானி பெயர்ஸ்டோ 1  சிக்ஸர் 4 பவுண்டரி உட்பட 49 (36)  ரன்கள் எடுத்து பும்ராவிடமும் விக்கெட் இழந்தனர். மேலும் டேவிட் மலான் 3 பவுண்டரி உட்பட 18(18) ரன்கள் , லியாம் லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 30(20)ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மொயின் அலி 4 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 43(20)க்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து தனது அணிக்கு ரன்களை குவிக்க உதவினார். இறுதியில் 20 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்தனர். இதில் முகமது ஷமி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், பும்ரா 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும், ராகுல் சஹார் 4 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன்- கே எல் ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 3 சிக்ஸர் 7 பவுண்டரி உட்பட 70(46) ரன்களும் கே எல் ராகுல் 6 பவுண்டரி 3சிக்ஸர் உட்பட 51(24)ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

மேலும் கேப்டன் விராட் கோலி 11(13)ரன்கள் ,சூர்யகுமார் யாதவ் 8(9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மேலும் ரிஷப் பந்த் 3 சிக்ஸர் 1 பவுண்டரி உட்பட 29(14)ரன்களும் , ஹார்திக் பாண்டியா 2 பவுண்டரி உட்பட 12(10) ரன்களும் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 19 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.

Be the first to comment on "டி 20 உலகக்கோப்பை 2021: இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.