டி 20 உலகக்கோப்பை தொடர் : ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இஷான் கிஷானை களமிறக்கலாம் என்று தனது விருப்பத்தை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 ஐசிசி ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து விளையாடுகின்றன.

இந்திய அணி முதல் லீக் போட்டியில்  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்று நெட் ரன் ரேட்டிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. . சூப்பர் 12 சுற்றில் அதிகபட்சம் மூன்று போட்டிகளிலாவது இந்தியா வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற சூழ்நிலையில் இனி வரும் 4 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இது சாத்தியம் என்ற கட்டாயத்தில் உள்ளது.

துபாய் சர்வதேச கிரிகெட் அரங்கத்தில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்த் அணி மோதவுள்ளன. இது மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இந்தியா இப்போட்டியில் வென்றே ஆக வேண்டும்.  பலமிக்க வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணியை எதிர்கொள்வது கடும் சவாலான ஒன்றாக இருந்தாலும் இந்தியா இந்த முக்கியமான போட்டியில் வென்றே ஆக வேண்டும்.  முதல் லீக் போட்டியில்  ஸ்காட்லாந்துக்கு எதிராக களமிறங்கி சிறப்பாக விளையாடி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனது நெட் ரன் ரேட்டையும் உயர்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தி அதிக ரெட் ரன் ரேட்டில் நாம் முன்னேற வேண்டும்.

கடைசி இரண்டு போட்டியில்  நமீபியா மற்றும்  ஸ்காட்லாந்து அணியுடன் இந்தியா பலபரிட்சை நடத்தி நிச்சயம் வெற்றியடையும்  என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. இப்போது நியூசிலாந்து மற்றும்  ஆப்கினாஸ்தானுக்கு எதிரான போட்டியை தான் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

இதில் எவ்வாறு இந்திய அணி செயல்பட வேண்டும் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது பற்றி முன்னாள் வீரர்கள் ஆலோசித்து வருகின்றனர். தற்போது பழம்பெரும் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் அதுகுறித்தான கருத்துகளைப் பற்றி தனியார் பத்திரிகை ஒன்றுக்குப்  பேட்டியாக கொடுத்துள்ளார். அதில் இந்தியா – நியூசிலாந்த் அணிக்கு இடையேயான போட்டியில் “ஹார்திக் பாண்டியா வலது தோல்பட்டை வலியின் காரணமாக பந்துவீச முடியவில்லை என்றால் நல்ல பார்மில் உள்ள இஷான் கிஷனை 11 வது வீரராக சேர்க்க வேண்டும் என்றும்  புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.

இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது ஆபத்து ஏனெனில் அதிகப்படியான மாற்றங்களை நிகழ்த்தினால் நாம் பயத்தில் இருக்கிறோம் என எதிரணி யூகித்துக்கொள்ளும். இதனால், அவர்களின் மனவுறுதி வலிமை பெற வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.

நாம் கடந்த போட்டியில் தோற்றாலும் , “அடுத்த நான்கு போட்டிகளில் வென்றாலே,  இறுதிப் போட்டியிலும் வெல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்” என்றார்.

Be the first to comment on "டி 20 உலகக்கோப்பை தொடர் : ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இஷான் கிஷானை களமிறக்கலாம் என்று தனது விருப்பத்தை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.