டி-20 உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில் இந்தியா அணியின் கே எல் ராகுல் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0047

நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றோடு  இந்திய அணி வெளியேறியது. இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் டாப் பேட்டர்கள், பவுளர்கள், ஆல்ரௌண்டர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்திய பேட்டர்களில் இரண்டு பேட்டர்கள் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் விராட் கோலியும், கே எல் ராகுலும் ஆவர்.

டாப் பேட்டர்கள்: பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் நான்கு இடங்கள் பின் தங்கியுள்ள  விராட் கோலி 698 புள்ளிகளுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவின் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் அடித்த மற்றொரு இந்திய பேட்டரான கே எல் ராகுல் 727 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 839 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச உலகக் கோப்பைப் போட்டியில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 52 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ரம் 796 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ராசி வேன் டெர் டூசென் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 94 ரன்கள் விளாசியதால் முதல் முறையாக பேட்டர்கள் டாப் 10 தரவரிசை பட்டியலில் நுழைந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டாப் பவுலர்கள்: டாப் பவுலர்கள் பட்டியலில் இந்திய அணியை பொறுத்தவரை  எந்த ஒரு பவுலரும் டாப் 10-ல் இடம் பிடிக்கவில்லை. இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்திலும், தென்னாப்ரிக்காவின் ஷம்சி 2வது இடத்திலும், இங்கிலாந்தை சேர்ந்த அடில் ரஷீத் 3வது இடத்திலும் என அடுத்தடுத்து  இடம் பிடித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஸம்ப்பா 5-வது இடத்திலும், ஹேசல்வுட் 8-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிம் சவுதி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டாப் ஆல்-ரவுண்டர்கள்: ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் பவுலர்கள் பட்டியலைப போல ஆல்ரௌண்டர்  பட்டியலிலும் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இடம் பிடிக்கவில்லை. ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி முதல் இடத்திலும், வங்கதேச அணியை சேர்ந்த ஷகி- அல் – ஹசன் இரண்டாவது இடத்திலும், இலங்கையை சேர்ந்த ஹசரங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் 3 இடங்கள் நகர்ந்து 4-வது இடத்திலும், மிட்ஷெல் மார்ஷ் 9-வது இடத்திலும் முன்னேறி இடம்பிடித்துள்ளனர். தென்ஆப்ரிக்கா அணியை சேர்ந்த மார்க்ரம் 7-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

Be the first to comment on "டி-20 உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில் இந்தியா அணியின் கே எல் ராகுல் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*