“டி வில்லியர்ஸின் வருகை, சில வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்” – ஜாண்டி ரோட்ஸ்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ், ஏபி டிவில்லியர்ஸை அணியில் சேர்க்கப்பட வேண்டும், அவர் அணியில் இணைந்தால் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அவரை அணியில் இணைப்பு அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு, சர்வதேச ஓய்விலிருந்து வெளியே வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் மார்க் பவுச்சர், வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் முடிவதற்குள் டிவில்லியர்ஸ் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் அணியில் இணைப்பது குறித்து அவர் உற்சாகமாக இருக்கலாம், ஆனால், தற்போது அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு வருத்தத்தை அளிக்கக் கூடும். ஏனெனில், உலகக் கோப்பை டி20 அணியில் இணைய வேண்டிய தற்போதைய வீரரை ஆடவிடாமல், பெஞ்ச்சில் உட்காரச் செய்யும்.

இந்த முடிவு மிகவும் சுவாரஸ்யமானது ஆனால் கடினமானது.” என்று ரோட்ஸ் கூறினார்.

உங்களுக்கு உங்களுடைய சிறந்த அணி விளையாட வேண்டும்இதில், யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்வது கடினமான ஒன்று. ஏபி டி மிகவும் சிறப்பு வாய்ந்த வீரர் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடவில்லை என்றால், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஒரு நபருக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறீர்களா?… பிறகு அவரை ஏன் அணியில் தேர்வு செய்கிறீர்கள்?

ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதைப் பலரும் பார்ப்பார்கள், ஆனால், அவரை பார்க்க மட்டுமே சிலர் பிக் பேஷ் லீக் பார்ப்பதும் உண்டு. அவர் ஒரு சிறந்த வீரர். நான் ஏபி டி வில்லியர்ஸின் பெரிய ரசிகன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். நீங்கள் எந்த விதியையும் மாற்றப் போவது இல்லை, நீங்கள் ஒரு முன்னோடியாக இருக்கப் போகிறீர்கள். அணியில் இடம்பெறாத சில வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.”

அந்த முடிவை எடுப்பது மிகவும் கடினம். நான் அணியைத் தேர்வு செய்ய நிர்வாகத்திலும் இல்லை. ஆனால், மீண்டும் உலகக் கோப்பையில் ஏபி டி வில்லையர்ஸ் விளையாடினால் சிறப்பானதாக இருக்கும்என்று ரோட்ஸ் கூறினார்.Be the first to comment on "“டி வில்லியர்ஸின் வருகை, சில வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்” – ஜாண்டி ரோட்ஸ்"

Leave a comment

Your email address will not be published.


*