டாப் 5 க்குள் இடம்பிடித்த இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ்…

www.indcricketnews.com-indian-cricket-news-70

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் போட்டி தரவரிசையில் டாப் 5க்குள் இடம்பிடித்துள்ளார்.பிரிஸ்டல்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 3  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்பட்டது.இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், அதிரடியாக அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  அவர் தனது  41.1வது ஓவரில் அரை சதம் அடித்து ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்.இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்தது இது 13வது முறை.அதன்பின் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) எடுத்து போல்டாக்கப்பட்டார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆண்டுகள் விளையாடியுள்ள அனுபவம் பெற்ற அவர், ஒரு நாள் போட்டி தரவரிசையில் டாப் 5 இடத்திற்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் 3 இடங்கள் முன்னேறி 5வது இடம் பெற்றுள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருக்கு பின்பு அவர் மீண்டும் டாப் 5க்குள் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி,சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையானார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் என்ற சிறப்பும் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களம் கண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். 38 வயதான இவர் இதுவரை 215 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி களம் கண்டுள்ளார். கடந்த 1999 ஜூனில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி ஒரு நல்ல தொடக்கத்தை தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமாக ஏற்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது 215வது போட்டியில் அவர் 72 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களத்தில் அவர் 7170 ரன்களை சேர்த்து மற்றொரு சாதனையையும் பிடித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ்.

தனது அணியின் மற்ற பெண் வீராங்கனைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

Be the first to comment on "டாப் 5 க்குள் இடம்பிடித்த இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ்…"

Leave a comment