டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம் டெஸ்டில் மீண்டும் நிரூபித்த கிங் கோலி!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் 2 வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று நடைபெற்றது.

தென்னாப்பிரிக்கா உடன் மோதும் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், தன்னுடைய இரண்டாவது சதத்தை குவித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 273/3 என்ற கணக்கில் முடித்தது.

கடந்த 10 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் கோலி சதம் அடிக்கவில்லை. அதை சேர்த்து வைத்து இந்தப் போட்டியில் ஆடித் தீர்த்தார் கோலி. எந்த கட்டத்திலும் தென்னாப்பிரிக்க அணியால் அவரை அழுத்தத்தில் வைத்திருக்க முடியவில்லை.

295 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார் கோலி. முதலில் பொறுமையாக ஆடத் துவங்கிய கோலி சதம் அடித்த பின் கொஞ்சம் வேகம் எடுத்தார். முதல் இன்னிங்க்ஸ் முடியும் வரை ஆட்டமிழக்காமல் நின்றார் கோலி.
254 ரன்கள் அடித்து களத்தில் இருந்த கோலி 33 ஃபோர். 2 சிக்ஸ் அடித்து இருந்தார். இதில் முக்கியமாக டபுள் செஞ்சுரி அடிக்கும் வரை ஒரு சிக்ஸ் கூட அவர் அடிக்கவில்லை.

இந்த இரட்டை சதம் கோலியின் ஏழாவது இரட்டை சதம் ஆகும். இதன் மூலம், இந்திய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றார் கோலி.

கேப்டன் விராட் கோலி 63 மற்றும் ரஹானே 18 என்ற ரண்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். வெர்னான் பிலாண்டர் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார், ஆனால் முந்தைய டெஸ்டில் இரட்டை சதம் அடித்த ரோஹித் ஷர்மா, விசாகப்பட்டினத்தில் காட்டிய திறனை இரண்டாவது டெஸ்ட்டில் காட்ட தவறினார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

காகிசோ ரபாடாவின் கடுமையான வேகமும் நிலைத்தன்மையும் 10வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை 14 ரன்களில் ஆட்டமிழக்க செய்தது. அன்ரிச் நார்ட்ஜேயின் பவுன்சரால் ஹெல்மெட் மீது பந்து மோதிய போதிலும் அகர்வால் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Be the first to comment on "டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம் டெஸ்டில் மீண்டும் நிரூபித்த கிங் கோலி!"

Leave a comment

Your email address will not be published.


*