ஜசிசி புதிய தரவரிசை வெளியீடு -முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்! கோலிக்கு 2-ம் இடம்…

www.indcricketnews.com-indian-cricket-news-129

மும்பை: ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலிருந்து சரிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். கொரோனா காரணமாக சற்று குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்போது அதிகளவில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (873) புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக  நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (158) ரன்கள் எடுத்தார்கள். இது அவரின் புள்ளிகள் உயர மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த விராட் கோலி (857) புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குத் சரிந்தார். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா (825) புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவர்களை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் டாப் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (737) புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் மெகிடி ஹசன் (713) புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், கிறிஸ் வோக்ஸ் (711) புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் வரிசைப்படுத்தபட்டுள்ளனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (690) புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்ற எந்த இந்திய பௌலரும் முதல் 10ல் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு அடுத்தடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து வருவதால் ஒருநாள் போட்டி தொடர்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது.

இதன் விளைவாக,  இந்திய வீரர்கள் ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து சரிவை காண்பதற்க்கு பல்வேறு வாய்ப்புக்கூறுகள் உள்ளது என கூறப்படுகிறது. இது இந்திய அணியில் டாப் 10 – ல் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமான நிலையாக அமைந்துள்ளது. மேலும் முதலிடம் பிடித்த பாக்கிஸ்தான் வீரர் பாபர் அசாம்க்கு சக விளையாட்டுவீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை ட்வீட் செய்து வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 150+ ஸ்கோரை எட்டிய முதல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ஒருவர் மட்டுமே. இதற்கு முன்பாக சானியா மிர்சா கணவர் ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 2008-ல் 125 எடுத்ததுதான் பாகிஸ்தான் கேப்டன் ஒருவரின் அதிகபட்ச  ரன் எண்ணிக்கையாக இதுவரை இருந்து வந்தது அதை பாபர் ஆசம் முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஜசிசி புதிய தரவரிசை வெளியீடு -முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்! கோலிக்கு 2-ம் இடம்…"

Leave a comment

Your email address will not be published.


*