சென்னை டெஸ்ட்: மாஸ் காட்டிய பௌலர்கள்…இங்கிலாந்து அபார வெற்றி!

England-defeat-India-in-the-first-Test
England-defeat-India-in-the-first-Test

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 578/10 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 337 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸை 241 ரன்கள் முன்னிலையுடன் துவங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், 420 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஐந்தாவது நாள் முதல் செஷன் முடிவில் கேப்டன் விராட் கோலி 45 (51), அஸ்வின் 2 (16) களத்தில் இருந்தார். இருவரும் இரண்டாவது செஷனில் சிறப்பாக விளையாடினால் போட்டியை டிரா செய்ய முடியும் எனக் கருதப்பட்டது. இங்கிலாந்து பௌலர்களும் அதிரடியாகப் பந்துவீசத் துவங்கினர்.

சிறப்பான முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அஸ்வின் 9 (46), ஜாக் லீச் வீசிய ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் விராட் கோலி 72 (104) ரன்கள் சேர்த்து போல்ட் ஆனதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஜாக் லீச் ஷாபாஸ் நதீமை காலி செய்தார். இது லீச்சுக்கு நான்காவது விக்கெட் ஆகும். கடைசி விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 192/10 ரன்கள் சேர்த்து, 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் துவங்கும். இதில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் ஒரு பந்துவீச்சு பிரிவாக நாங்கள் கூட்டாக போதுமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் உடல் மொழியும் அணுகுமுறையும் குறிக்கப்படவில்லை. பேட்டிங்கில் கூட, எங்கள் ஷாட் தேர்வு மற்றும் முடிவுகளின் அடிப்படையில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நாங்கள் எந்தவிதமான காரணத்தையும் கூற விரும்பவில்லை மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் மேம்படுத்த விரும்பும் ஒரு பக்கம், என்று விராட் கோஹ்லி கூறினார்.

Be the first to comment on "சென்னை டெஸ்ட்: மாஸ் காட்டிய பௌலர்கள்…இங்கிலாந்து அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*