செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-084

சென்சூரியன்: கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல்  இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 105 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 327 ரன்களை குவித்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணி 62 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 50 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து, 305 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நான்காவது நாள் முடிவில் 40 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 94 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 5 வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர்  12 பவுண்டரி உட்பட 77 (156) ரன்கள் எடுத்தபோது , பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி நடையைக் கட்டினார். இதில் பவுமா 35(80) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.

மேலும், முல்டர்1(3), யான்சன்13(14), ரபாடா0(4), நெகடி0)(1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா 68 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 191 ரன்களில் சுருண்டது. இதில், ஷமி மற்றும் புஜாரா தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்த மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட்களில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 2 டெஸ்ட்களில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. மேலும்  3 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதில், கடந்த 2000ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடமும் , 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியிடமும் சென்சுரியனில் தோல்வியடைந்தது.

இதைதொடர்ந்து , முதல்முறையாக இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, அசாரூதீன், டிராவிட், தோனி தலைமையிலான இந்திய அணி செய்யாத சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.

இந்த வெற்றிக்கு, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மட்டுமே காரணமல்ல ,விராட் கோலி தைரியமாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 மேலும், இதற்குமுன் 2018ஆம் ஆண்டில்தான் நான்குமுறை வெளிநாட்டு மண்ணில் வெற்றியைப் பெற்றிருந்தது. அதைதொடர்ந்து, இந்த ஆண்டும் இந்திய அணி ஆசியாவைத் தவிர்த்து பிரிஸ்பேன், லார்ட்ஸ், ஓவல், செஞ்சூரியன் போன்ற வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை பதிவுசெய்து, வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.