சூர்யகுமார ஏன் எடுக்கல, வாய்ப்பு கொடுத்தா கொறஞ்சா போய்டுவிங்க: கம்பீர் அதிருப்தி!

'It'll surely hurt me if I were in Suryakumar's place': Gautam Gambhir slams Team India's selection in 3rd T20I
'It'll surely hurt me if I were in Suryakumar's place': Gautam Gambhir slams Team India's selection in 3rd T20I

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் புதுமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இஷான் கிஷன் துவக்க வீரராகக் களமிறங்கி அரை சதம் விளாசி அசத்தினார். அடுத்துக் களமிறங்க கேப்டன் விராட் கோலி 73 ரன்கள் அடித்து அணிக்கு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. கிஷன் கிடந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்ததுபோல், மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு, துவக்க வீரர் ரோஹித் ஷர்மா களமிறக்கப்பட்டார்.

முதல் இரண்டு போட்டிகளில் சரியாக சோபிக்காத ஓபனர் கே.எல்.ராகுலை நீக்காமல், களமிறங்க வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூர்யகுமாரை நீக்கியதற்குக் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீரும் தனது அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.

“சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்காதது அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்காகத் தயாராகி வந்தார். இனி அடுத்த டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நான் அவருடைய இடத்தில் இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதே நிலை சூர்யகுமாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

“வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். அவர் நன்றாக விளையாடவில்லை என்றால் அதன்பிறகு அவரை நீக்குவது குறித்து முடிவு செய்யலாம். ஓபனர் இஷான் கிஷன் முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடினார். ஆனால், அடுத்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இது ஏற்றுக்கொள்ளும்படியான விஷயம் கிடையாது” எனக் கூறினார். “சூர்யகுமாருக்கு மூன்று, நான்கு போட்டிகளிலாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை 4ஆவது இடத்தில் களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்கள் காயத்தால் அவதிப்பட்டால், அவருக்கு மாற்று வீரராக ஒருவர் தேவைப்படுவார் அல்லவா. அந்த இடத்திற்காவது சூர்யகுமாரை தயார்ப்படுத்த வேண்டும். எதிர்வரும் போட்டிகளில் அவர் களமிறங்குவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி நாளை நடைபெறும். இத்தொடர் முடிந்தவுடன் மார்ச் 23ஆம் தேதிமுதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "சூர்யகுமார ஏன் எடுக்கல, வாய்ப்பு கொடுத்தா கொறஞ்சா போய்டுவிங்க: கம்பீர் அதிருப்தி!"

Leave a comment

Your email address will not be published.