சூர்யகுமார் யாதவின் அபார சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

www.indcricketnews.com-indian-cricket-news-100283
Indian player Suryakumar Yadavnand New Zealand captain Kane Williamson. New Zealand v India. 2nd Twenty20 International cricket match. Bay Oval, Mount Maunganui. New Zealand. Sunday 20 November 2022. ( Andrew Cornaga / Photosport )

மவுண்ட் மாவுங்குனி: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நேற்று மவுண்ட் மாங்குனியிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்-ரிஷப் பந்த் ஜோடியில் ரிஷப் பந்த் 6(13) ரன்களில் ஃபெர்குசன் பந்துவீச்சில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, மறுமுனையில் இஷ் சோதி பந்துவீச்சில் இஷான் கிஷன் 36(31) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஷ்ரேயாஸ் ஐயர்  பேக் ஃபுட்டில் நின்று ஷாட் அடிக்க முற்பட்டு 13(9) ரன்களில் ஹிட் விக்கெட்டாகி வெளியேறினாலும், மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யக்குமார் யாதவ் முதல் பந்திலிருந்தே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

ஆனால் மறுபுறம் கடைசி ஓவரை வீசிய டிம் சௌதீ கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 13(13) ரன்களிலும், அடுத்துவந்த தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கோல்டன் டக் அவுட்டாக்கியும் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார். இதில் இறுதிவரை அவுட்டாகாமல் களத்திலிருந்த சூர்யகுமார் 11 பவுண்டரி, 7 சிக்சர் உட்பட 111(51) ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான ஃபின் ஆலன் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு தொடக்க வீரரான டேவோன் கான்வே 25(22) ரன்கள் எடுத்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவர்களைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸை 12(6) ரன்களில் யுஸ்வேந்திர சஹால் வீழ்த்த, தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்சேல் 10(11),ஜேம்ஸ் நீசம் 0(3), மிட்சேல் சாட்னர் 2(7) ஆகியோரை இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியமான பந்துவீச்சால் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி போட்டியை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்நனர்.

இருப்பினும் மறுமுனையில் நிலைத்துநின்று போராடிய வில்லியம்சன் கடைசி நேரத்தில் முகமது சிராஜ் பந்துவீச்சில் 61(52) ரன்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த இஷ் சோதி 1(3), டிம் சௌதீ 0(1) ஆடம் மில்னே 6(5) ஆகியோரின் விக்கெட்டை தீபக் ஹூடா கைப்பற்றியதால், நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களிலேயே 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.  இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி சார்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Be the first to comment on "சூர்யகுமார் யாதவின் அபார சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது."

Leave a comment

Your email address will not be published.


*