சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-01093

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாயில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 28(16) ரன்கள் எடுத்திருந்த நிலையில் குஷ்தில்ஷாவிடம் கேட்சாகி ஆட்டமிழக்க, மறுமுனையில் ராகுல் 28(20) ரன்களுக்கு ஷதாப் கான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரயக்குமார் யாதவ் 13(10), ரிஷப் பந்த் 14(12), ஹர்திக் பாண்டியா 0(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டு சரிவு ஏற்பட்டாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் விளாசி சர்வதேச டி20 போட்டியில் அதிகமுறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் அவருக்கு உறுதுணையாக அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 16(14)  ரன்களில் வெளியேற, விராட் கோலி 60(44) ரன்களுக்கு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்த இந்திய அணி 181 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான பாபர் அசாம் 14(10) ரன்கள் எடுத்தபோது ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஃபகர் ஸ்மான் 15(18) ரன்களில் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின்னர் பார்டனர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான முகமது ரிஸ்வான்- முகமது நவாஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தினார்.

இருப்பினும் ரிஸ்வான் 71(51) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நவாஸ் 42(20) ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் விக்கெட்டை  பறிகொடுத்தார்.

இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆசிஃப் அலி-குஷ்டில் ஷா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற கயைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஆசிஃப் அலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 2 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில், பாகிஸ்தான் டபுள்ஸ் ஓடி ஒரு பந்து எஞ்சிய நிலையில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

Be the first to comment on "சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*