சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: பேட் கம்மின்ஸ்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 14-ந்தேதி நடக்கிறது. உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘உலகில் மற்ற இடங்களில் விளையாடுவதை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஆட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருப்பார்கள். ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டியில் மிகப்பெரிய அளவில்  பந்து திரும்பும் அளவிற்கு ஆடுகளம் மாறுவது  அரிதானது.

கடந்த தொடரின்போது நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கருதுகிறேன். இந்தியாவும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மிடில் ஓவர்கள் அவர்கள் பந்து வீசுவது முக்கியமானது’’ என்றார். ஆஸ்திரேலியா ஆஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி புதிய மைல் கல் சாதனையை படைக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஒரு கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை தொட விராட் கோலிக்கு இன்னும் ஒரு ரன்னே தேவை. அந்த ரன்னை இன்றைய போட்டியில் கோலி எடுத்து சாதனை படைக்க இருக்கிறார்.

ஒட்டு மொத்தமாக சர்வதேச போட்டியில் கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை 5 பேர் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் விராட் கோலி 6-வது வீரராக இணைகிறார். இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியின்போது, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை (2633) விராட் கோலி முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தமாக விராட் கோலி டெஸ்டில் 7202 ரன்னும், ஒருநாள் போட்டியில் 1,609 ரன்னும், 20 ஓவர் போட்டியில் 2663 ரன்னும் எடுத்து உள்ளார்.

தவான், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இலங்கையை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி. இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா அணி.

Be the first to comment on "சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: பேட் கம்மின்ஸ்"

Leave a comment

Your email address will not be published.


*