சும்மா கிழி கிழின்னு கிழிச்ச கிறிஸ் மோரிஸ்… ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

Morris helps Rajasthan Royals beat Delhi Capitals by 3 wickets
Morris helps Rajasthan Royals beat Delhi Capitals by 3 wickets

கிறிஸ் மோரிசின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கொண்டது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கேடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று விளையாடுகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளது.

கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை தனி ஆளாக நின்று போராடியது வீணானது. அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியில் அவர் எடுத்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது.தனிநபராக சிறப்பாக விளையாடியிருந்தாலும் கேப்டனாக அனுபவமில்லாமல் செயல்பட்டார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் விமர்சித்தனர்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை சேர்த்தது. ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் 148 ரன்கள் வெற்றி இலக்கை ராஜஸ்தான் அணி அசால்ட்டாக சேஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பட்லர், சாம்சன் உள்ளிட்ட தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற பவர்ப்ளே முடிவதற்குள் ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் மோரிஸ் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாச, 19.4 ஒவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. கிறிஸ் மோரிஸ் விளாசிய 36 ரன்களால் (18 பந்துகள்) தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முந்தைய ஆட்டத்தில் ஒரு பந்துக்கு 5 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தபோது மோரிஸுக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தானே ஆடிய சஞ்சு சாம்சன் அந்தப் பந்தில் ஆட்டமிழந்தார்.ஆனால் இன்றைய போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 27 ரன் அடிக்க வேண்டியிருந்த நிவையில் மோரிஸ் 4 சிக்சர்களுடன் 30 ரன் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "சும்மா கிழி கிழின்னு கிழிச்ச கிறிஸ் மோரிஸ்… ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.