சாம்சன் விட இஷான் கமிஷனுக்கு தான் வாய்ப்பு வழங்கபப்ட வேண்டும்- தினேஷ் காரத்திக்

www.indcricketnews.com-indian-cricket-news-10034903

டெல்லி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று தங்களை நம்பர் 1 அணி என்பதை நிரூபித்தது. இதனைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரும் ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் தீவில் நடைபெறவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது.

எனவே உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு தேவையான வீரர்களுக்கு பிசிசிஐ நிர்வாகம் வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் காயமடைந்துள்ள நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற சாம்சன், ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சாம்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில் தற்போது ராகுல் காயமடைந்துள்ளதால், இத்தொடரிலாவது சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2011 உலகக்கோப்பை தொடரில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற இடதுகை வீரர்கள் அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியதை நம்மால் மறக்க முடியாது. ஆனால் தற்போதைய இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே வலதுகை வீரர்களாக இருக்கின்றனர். எனவே உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து அதிரடியாக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேனான இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷன் சற்று முன்னுரிமையுடன் அணியில் விளையாட வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்கு தற்சமயத்தில் இடதுகை வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

அதன்காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலேயே இஷான் கிஷன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். மேலும் அவர்  ரிசர்வ் தொடக்க வீரராகவும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான திறமையைக் கொண்டுள்ளார்” இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார். அதாவது இஷான் கிஷன் அணியில் தேர்வு செய்யப்பட்டால் இடதுகை பேட்ஸ்மேன் பிரச்சினை மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பருக்கும், தொடக்க வீரருக்கும் ரிசர்வ் வீரராக அவரே இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Be the first to comment on "சாம்சன் விட இஷான் கமிஷனுக்கு தான் வாய்ப்பு வழங்கபப்ட வேண்டும்- தினேஷ் காரத்திக்"

Leave a comment

Your email address will not be published.


*