சர்வதேச உலகக்கோப்பை 2021 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் தாயகம் திரும்புகிறது.

www.indcricketnews.com-indian-cricket-news-0034

துபாய்: டி20 உலக கோப்பை 2021 தொடரின் நேற்றைய (நவ்: 8)கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமிபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே பேட்டிங் செய்ய நமிபியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்டீபன் பார்ட் – மைக்கேல் வான் லிங்கன் ஜோடி களமிறங்கினர்.

நல்ல தொடக்கத்துடன் தொடங்கிய மைக்கேல் வான் லிங்கன் 2 பவுண்டரி உட்பட 14 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய 4.4வது ஓவரில் ஷமி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்டீபன் பார்ட் 1 சிக்ஸர் 1 பவுண்டரி உட்பட 21 (21)ரன்கள் சேர்த்து ஜடேஜா வீசிய பந்தில் lbw முறையில் அவுட் ஆனார். அந்த அணியில் அதிகபட்ச ரன்களை குவித்த டேவிட் வைஸ்

2 பவுண்டரி உட்பட 26(25)ரன்கள் குவித்து  ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் நமிபியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து132 ரன்களை சேர்த்தது. இதில் சுழலில் மிரட்டிய ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

எனவே 133 ரன்கள் இலக்காக கொண்டு வலுவான தொடக்கத்துடன் களமிறங்கிய இந்திய அணி முதல் விக்கெட் இழப்பு 86 ரன்களை சேர்த்தது.தொடக்க ஆட்டக்காரர்களான  ரோகித் ஷர்மா – கே எல் ராகுல் ஜோடியில் 2 சிக்ஸர் 7 பவுண்டரி உட்பட 56(37) ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா ஜேன் ஃபரைலிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கேஎல் ராகுல்  2 சிக்ஸர் 3 பவுண்டரி உட்பட 54(36)ரன்களையும் சூர்யகுமார் யாதவ்   4 பவுண்டரி உட்பட 25(19) ரன்களையும் அதிரடியாக குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 15.2 வது ஓவரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.

நடப்பு சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 தோல்வி 3 வெற்றிகளை பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாததால் நாளை தாயகம் திரும்பிகின்றனர்.

அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளின் முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10ம் தேதியும், பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளின் 2வது அரையிறுதி போட்டி நவம்பர் 11ம் தேதியும் நடக்கவுள்ளன. இதில் தகுதி பெறும் அணிகளே வரும் நவம்பர் 14ம் தேதி  இறுதிப்போட்டியில் களமிறங்குவார்கள்.

Be the first to comment on "சர்வதேச உலகக்கோப்பை 2021 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் தாயகம் திரும்புகிறது."

Leave a comment

Your email address will not be published.


*