சபதத்தை நிறைவேற்ற ரூட்: இந்திய அணிக்கு செம்ம பதிலடி!

India vs England, India 145 all out, lead England by 33 runs
India vs England, India 145 all out, lead England by 33 runs

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 168 ரன்கள் குவித்து, இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராக உள்ளார். ஜோ ரூட் (297), ரோஹித் ஷர்மா (205) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். தொடர்ந்து அரை சதங்களைக் குவிக்கக் கூடிய ரிஷப் பந்த், பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்து பௌலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜோ ரூட், “பந்தை விரைவில் வீழ்த்த கடுமையாகப் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மொடேராவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 112/10 ரன்களுக்கு சுருண்ட நிலையில் அடுத்துக் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆகியுள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். தற்போது இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்துள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் ரோஹித் ஷர்மா 57 (82), அஜிங்கிய ரஹானே 1 (3) களத்தில் இருந்தார்கள். மைதானம் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் ஜாக் லீச்சுக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்பட்டத்து. ஒரேயொரு ஸ்பின்னரை தவிர்த்து மற்ற வேகப்பந்து வீச்சாளர்களால் இந்திய அணிக்கு நெருக்கடி உருவாக்க முடியவில்லை.

இதனால் ஜாக் லீச்சுடன் இணைந்து ரூட் பந்துவீசினார். மைதானம் சுழலை ஏற்றுக்கொண்டதால் ரஹானே 7 ரன்கள் சேர்த்த நிலையில் லீச்சிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ரோஹித் ஷர்மா (66) அரை சதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதனால், இந்திய தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டனர். குறிப்பாக, ஜோ ரூட் தனது முதல் பந்தில் ரிஷப் பந்தை 1 (8) காலி செய்து அசத்தினார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பரீத் பும்ரா விக்கெட்களையும் தட்டி தூக்கி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ரூட்.

போட்டிக்கு முன்பு ரூட் கொடுத்த பேட்டியில், ரிஷப் பந்தை விரைவில் பெவிலியன் அனுப்ப எங்களிடம் திட்டம் இருக்கிறது. நிச்சயம் அதன்படி செயல்பட்டு வெளியேற்றுவோம் எனத் தெரிவித்திருந்தார். இதனை தற்போது ரூட் சாத்தியப்படுத்தியுள்ளார். இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "சபதத்தை நிறைவேற்ற ரூட்: இந்திய அணிக்கு செம்ம பதிலடி!"

Leave a comment

Your email address will not be published.


*