கோலி படைதான் பெஸ்ட்…அடிச்சு சொல்லும் மே.இ தீவுகள் அணி முன்னாள் கேப்டன்!

legendary Clive Lloyd praise on Virat Kohli and team
legendary Clive Lloyd praise on Virat Kohli and team

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிதான் சிறந்த அணி என மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை துவங்கும்.

உலகக் கோப்பை வென்ற கேப்டன் புகழாரம்:

இதற்குமுன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு 1975, 1979ஆம் ஆண்டுகளில் கோப்பை வென்றுகொடுத்த கேப்டன் கிளைவ் லாயிட், இந்திய அணி முன்பு இருந்ததைவிட தற்போதுதான் வலுவாக இருக்கிறது எனத் தெரிவித்தார். “தற்போது உள்ள இந்திய அணி முன்பைப்போல் அல்ல. அனைத்து வீரர்கள் உலகத் தரத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். இருப்பினும், டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரைப் பார்த்த அனைவரும் சொல்வார்கள், இப்போது இருக்கும் இந்திய அணிதான் பெஸ்ட் என்று” எனத் தெரிவித்தார்.

966ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டுவரை, கிட்டதட்ட 19 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய கிளைவ், பும்ராவை பாராட்டிப் பேசினார். டீம் இந்தியாவுக்கு ஜஸ்பிரீத் பும்ராவின் முக்கியத்துவத்தையும் லாயிட் எடுத்துரைத்தார், சிக்கலான காலங்களில் வேகப்பந்து வீச்சாளர் தனது திறமையால் அணியை மீட்பதற்கான திறன் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கினார். “பும்ரா தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். வேகம் குறைந்த பந்து, துல்லிமான யார்க்கர், ஸ்விங் என மாற்றிமாற்றிப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இந்திய அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் இவரால் விக்கெட் வீழ்த்திக்கொடுக்க முடிகிறது. குறையில்லாமல் பந்துவீசி வருகிறார்” எனக் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற ஜஸ்பரீத் பும்ரா, அதன்பிறகு கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் விளையாட்டுத் துறை வர்ணனையாளர் சஞ்சனா கணேசனை மணமுடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தபிறகு துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை மடிக்க டீம் இந்தியா தற்போது எதிர்பார்த்துள்ளது.

Be the first to comment on "கோலி படைதான் பெஸ்ட்…அடிச்சு சொல்லும் மே.இ தீவுகள் அணி முன்னாள் கேப்டன்!"

Leave a comment

Your email address will not be published.