கோலி படைக்கும் மெகா சாதனை… இன்னும் ஒரு சதம் மட்டும் தேவை! !

Kohli On The Verge Of Breaking Several Captaincy Records In 4th Test
Kohli On The Verge Of Breaking Several Captaincy Records In 4th Test

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை யாரும் படைக்காத சாதனையை எதிர்நோக்கியுள்ளார். இன்னும் அவருக்கு ஒரேயொரு சதம் மட்டுமே தேவை…

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு அரை சதங்களை விளாசியுள்ளார். ஆனால், அதைச் சதமாக மாற்ற முடியவில்லை. கடைசி டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது. இதில் கோலி அதிரடியாக விளையாடி சதம் எடுக்கும் பட்சத்தில் உலகில் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை அவர் படைப்பார். அது என்ன சாதனை?

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதமெடுத்த ‘ரன் மிஷின்’ கோலி அதன்பிறகு தற்போதுவரை ஒரு சதம் கூட எடுக்கவில்லை. டெஸ்டில் தொடர்ந்து 11 இன்னிங்ஸ்களாக மூன்று இலக்க ரன்களை எடுக்க முடியாமல் திணறி வருகிறார். திர்வரும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துவிடுவார். தற்போது ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலி இருவரும் 41 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர். மோடேராவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம், உள்ளூர் மைதானங்களில் இந்திய டெஸ்ட் அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

உள்ளூர் மைதானங்களில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி 30 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 21 வெற்றிகளைப் பெற்றது. விராட் கோலி தலைமையில் 29 போட்டிகளில் 22 வெற்றிகளைக் குவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சவ்ரவ் கங்குலி 21 வெற்றிகளையும், முகமது அசாருதீன் 14 வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி இரண்டு அரைசதம் அடித்தார். இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற தொடர் முன்னிலையுடன் வருகிறது. நான்காவது டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க முடிந்தால், தொடக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். தற்போது நடைபெற்று வரும் தொடரில் கோஹ்லி ஒரு சதம் அடிக்கவுள்ள நிலையில், ஜோ ரூட், ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு பின்னால் அதிக ரன்கள் எடுத்த நான்காவது இடத்தில் உள்ளார்.

Be the first to comment on "கோலி படைக்கும் மெகா சாதனை… இன்னும் ஒரு சதம் மட்டும் தேவை! !"

Leave a comment

Your email address will not be published.